இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bonsack's machine
1880 இல் கண்டுபிடிக்கப்பட்ட, மற்றும் 1881 இல் காப்புரிமை பெறப்பட்ட ஜேம்ஸ் ஆல்பர்ட் போன்சாக்கின் சிகரெட் உருட்டும் இயந்திரம்.

அறிவியல் வரையரைப்படி இயந்திரம் (Machine) என்பது ஆற்றலை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவோ அல்லது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றவோ உதவும் கருவியாகும். எனினும் பொதுவாக இச்சொல் பயனுள்ள வேலையைச் செய்கின்ற அல்லது செய்ய உதவுகின்ற கருவியையே குறிக்கின்றது.

இயந்திரங்களுக்கு பொதுவாக ஆற்றல் முதலீடு (மூலம்) தேவை. மற்றும் இவை ஏதேனும் குறிப்பிட்ட பயனுடைய ஒரு வேலையைச் செய்கின்றன.

பொதுவாக வெப்ப ஆற்றலையோ அல்லது ஏதேனும் ஓர் ஆற்றலையோ நகர்ச்சி போன்ற இயங்கு ஆற்றலாக மாற்றும் இயந்திரம் உந்துபொறி அல்லது உந்து இயந்திரம் (Engine) என்று அழைக்கப்படுகிறது.


பயன்பாடு[தொகு]

காற்றாலை விசிறிகள் (பெரும் சுழலிகள், டர்பைன்கள்)

ஒரு ஆட்டோமொபைல் இயந்திரம் உள் எரிப்பு இயந்திரம் எனப்படும். ஏனெனில் அது ஒரு உருளையின் உள்ளே எரிபொருளை எரித்து, விரிவடைகின்ற வாயுக்களை பயன்படுத்தி உந்துருளை இயக்கப் பயன்படுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திரம்&oldid=2105496" இருந்து மீள்விக்கப்பட்டது