காற்றிதழ்

காற்றிதழ் (Airfoil (அ) Aerofoil) என்பது இறக்கை அல்லது அலகின் (உந்தி, சுற்றகம், சுழலி) பாய்மரப்படகின் பாய் ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஆகும்.
காற்றிதழ் வடிவிலான திடப்பொருள் ஒரு பாய்மத்தில் செல்லும்போது காற்றியக்க விசைகளை உருவாக்குகிறது. அவ்விசைகளுள் முக்கியமானது, பொருள் செல்லும் திசைக்கு செங்குத்தாக செயல்படும் ஏற்றம் ஆகும். இயக்கதிசைக்கு இணையாக, ஆனால் எதிர்திசையில், செயல்படும் விசை இழுவை எனப்படும். குறையொலிவேக பறத்தலில் பயன்படும் காற்றிதழ்களின் பொதுவான பண்புகள்: மொழுக்கட்டையான தலைப்புமுனையும் கூரான பின்விளிம்பும் கொண்டிருக்கும், மேலும் பெரும்பாலான நேரங்களில் சமச்சீரற்ற விற்சாய்வும் கொண்டிருக்கும். இதேபோன்ற குணங்களோடு நீரை இயங்கு பாய்மமாகக் கொண்ட இதழ்கள் நீரிதழ்கள் எனப்படும்.
காற்றிதழில் உருவாகும் ஏற்றம், காற்றிதழின் தாக்குகோணம் மற்றும் வடிவத்தைப் பொறுத்தது. காற்றிதழை காற்றோட்டத்துக்கு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமையும்போது, காற்றிதழ் காற்றோட்டத்தை விலக்கி விடுகிறது. அதனால் காற்றின் விலக்க திசைக்கு நேரெதிர்த்திசையில் காற்றிதழின்மீது விசை ஏற்படுகிறது. அவ்விசை காற்றியக்க விசை எனப்படுகிறது, அதனை இருகூறுகளாக பிரிக்கலாம்: ஏற்றம், இழுவை. பெரும்பான்மையான காற்றிதழ்கள் ஏற்றவிசையை உருவாக்குவதற்கு நேர்மறை தாக்குகோணங்கள் தேவைப்படும், ஆனால் விற்சாய்வுடை காற்றிதழ்கள் சுழிய தாக்குகோணத்திலும் ஏற்றத்தை உருவாக்கும். இவ்வாறு காற்றிதழின் அருகாமையில் காற்றோட்டம் விலகிச் செல்வதால் வளைந்த சீர்வரிகள் உண்டாகின்றன, அதனால் காற்றிதழின் ஒரு பக்கம் குறைந்த அழுத்தமும், மற்றொரு பக்கம் அதிக அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த அழுத்த வேறுபாட்டோடு திசைவேக வேறுபாடும் ஏற்படுகிறது, பெர்னூலி தத்துவத்தின்படி, எனவே காற்றிதழைச் சுற்றி ஏற்படும் பாய்வுப்புலத்தில் மேற்புறம் சராசரி திசைவேகம் அதிகமாகவும் கீழ்ப்பக்கம் சராசரி திசைவேகம் குறைவாகவும் இருக்கும். இதனால் ஏற்படுகின்ற ஏற்றத்தை மேல்/கீழ் பக்கங்களுக்கிடையேயான திசைவேக வேறுபாட்டை வைத்தே சுழற்சி (பாய்ம இயக்கவியல்)|சுழற்சி மற்றும் குட்டா-ஜோகோவ்ஸ்கி தேற்றம் ஆகியவற்றின் மூலம் கணக்கிடலாம், காற்றிதழைச் சுற்றி அழுத்தத்தைக் கணக்கிடத் தேவையில்லை.
உசாத்துணைகள்[தொகு]
- Anderson, John, D. Fundamentals of Aerodynamics. McGraw-Hill. https://archive.org/details/fundamentalsofae0000ande_r1y6.
- Desktopaero பரணிடப்பட்டது 2007-02-22 at the வந்தவழி இயந்திரம்
- University of Sydney, Aerodynamics for Students[தொடர்பிழந்த இணைப்பு]
- George Batchelor. An Introduction to Fluid Dynamics. Cambridge UP. பக். 467–471.
வெளியிணைப்புகள்[தொகு]
- UIUC Airfoil Coordinates Database பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம்
- Database with airfoils பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Airfoil & Hydrofoil Reference Application பரணிடப்பட்டது 2011-01-09 at the வந்தவழி இயந்திரம்
- The Joukowski Airfoil
- Chard Museum பரணிடப்பட்டது 2016-01-05 at the வந்தவழி இயந்திரம் The Birth of Powered Flight.
- FoilSim An airfoil simulator from NASA.