கப்பி
கப்பி (ⓘ) (Pulley) என்பது, விளிம்பில் வரிப்பள்ளத்தைக் கொண்ட ஒரு சில்லு ஆகும். ஒரு கயிறு, கம்பிவடம் அல்லது பட்டி இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு விசையின் திசையை மாற்றுவதற்கும், சுழல் இயக்கத்தை உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது பொறிமுறைநயத்தை உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி
[தொகு]ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கப்பிகள் ஒரு பட்டி மூலம் இணைக்கப்பட்ட தொகுதி இதுவாகும். பொறிச்சக்தி, அடிப்பு முதலானவை இப்பட்டி மூலம் கடத்தப்படும்.
கப்பித் தொகுதிகளின் வகைகள்
[தொகு]நிலைத்த தனிக்கப்பி இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். எத்தனம் வழங்கும் திசையை மாற்றமுடியும். இது முதல் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 1 ஆக இருக்கும்.
- இயங்கும் தனிக்கப்பி
இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்காது. இது இரண்டாம் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 2 ஆக இருக்கும்.
- இணைந்த கப்பித் தொகுதி
நிலைத்த தனிக்கப்பி, இயங்கும் தனிக்கப்பி ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இது காணப்படும்.