விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விசை
Force examples.svg
விசை என்பது பொதுவாக இழுவை அல்லது தள்ளல் எனக் கருதப்பட்டாலும் புவியீர்ப்பு மற்றும் காந்த விசை போன்ற தொடுகையற்ற விசைகளாலும் திணிவு ஆர்முடுகலுக்கோ அமர்முடுகலுக்கோ உட்படும்.(விசை என்பது ஒரு போருளை இயக்குதல் அல்லது இயக்க முயலுதல்)
பொதுவான குறியீடு: F
SI அலகு: நியூட்டன்
வேறு அலகுகளிலிருந்து பெறப்படும் வாய்ப்பாடு: F = m a
மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு
அடிப்படைக் கருத்துக்கள்
வெளி · நேரம் · திணிவு · விசை
ஆற்றல் · உந்தம்

விசை (Force) என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. மரத்தில் இருந்து பழம் கீழே விழுவது, நீரானது ஓரிடத்தில் இருந்து தாழ்வான வேறு ஓரிடத்திற்குப் பாய்வது அனைத்தும் நிலத்தின் ஈர்ப்பு விசையாலாகும். ஈர்ப்பு விசை என்பது நிலம் தன் பால் ஒரு பொருளை இழுக்கும் அல்லது ஈர்க்கும் விசை ஆகும். எல்லாப் பொருட்களுக்கும் தன் பொருட் திணிவால், பொருட் திணிவின் அளவைப் பொருத்து ஈர்ப்பு விசை உண்டு.

இது தவிர, மின் விசை, காந்த விசை, மற்றும் நாம் நம் கையால் ஒருபொருளை உந்தித்தள்ளும் விசை என்று ஒரு பொருளின் மீது எவ்வாறேனும் விசை செலுத்தப்படலாம், அல்லது தொழிற்படலாம். சுழல் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விசையை முறுக்கு விசை என்கிறோம்.

விசையைப்பற்றி ஐசாக் நியூட்டன் கூறிய விதிகள் பரவலாக அறிந்தவை.

இவ்விதிகளைக் கீழ்க்காணுமாறு கூறலாம்:

 • நியூட்டனின் முதலாவது விதி: ஒரு பொருளின் மீது வெளிப்புற நிகர சக்தி அல்லது விசை செயற்படுத்தப்படும் வரை , அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.
 • நியூட்டனின் இரண்டாம் விதி: ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம் அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது நேரத்திற்கு நேரம் விரைவே மாறுபடும் விரைவுதனைக் குறிப்பது. ) முடுக்கம் = கால அடிப்படையில் விரைவு மாறும் வீதம்)

இந்த நியூட்டனின் இரண்டாவது விதி விசைகளின் பலத்தை அரிய உதவுகின்றது. உதாரணமாக, கிரகங்களின் சுற்றுவட்ட பாதைகளின் முடுக்கங்களை கணக்கிட உதவுகிறது.

நியூட்டனின் இயக்கவியல்[தொகு]

ஐசக் நியூட்டன்

சர் ஐசக் நியூட்டன் நிலைமம் மற்றும் விசை ஆகியவற்றின் கருத்துக்களை பயன்படுத்தி அனைத்துப் பொருட்களின் இயக்கத்தையும் விவரிக்க முயன்றார், மற்றும் அவ்வாறு அவர் செய்ய சில மாறத தன்மை கொண்ட விதிகளையும் ( conservation laws) மேற்கொண்டார். 1687 ஆம் ஆண்டு, நியூட்டன் தனது பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) எனும் ஆய்வறிக்கையில் விசையை பற்றி விரிவாக வெளியிட்டார். இந்த பணியில் தான் நியூட்டன் தனது மூன்று கோட்பாடுகளையும் வெளியிட்டார்.

இயற்பியலில் விசையின் வரைவிலக்கணம்[தொகு]

இயற்பியலில் விசை என்பது நேரத்துடன் உந்தம் மாறும் வீதம் ஆகும். உந்தம் () என்பது பொருட் திணிவு () , அதன் விரைவு () ஆகியவற்றின் பெருக்குத் தொகை.

.

இங்கு, உந்தம் , திணிவு , வேகம் ஆகும்.

திணிவு m நேரத்துடன் ஒரு மாறிலி எனின், நியூட்டனின் இரண்டாம் விதி பின்வருமாறு தரப்படும்:

இங்கு முடுக்கம் அல்லது ஆர்முடுகல் எனப்படும்.

விசையைக் கணக்கிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை[தொகு]

 • விசை என்பது பொருள்களுக்கிடையே ஏற்படும் செயலெதிர் செயலின் விளைவு.
 • ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளைக் காட்ட வேண்டும் எனில், எந்தப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருளோடு செயலெதிர் செயலில் ஈடுபடுகின்றன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
 • விசைகளைச் சேர்த்து வைத்தல் என்பது முடியாது; பொருள்களுக்கிடையே செயலெதிர் செயல் முடிந்தவுடன் விசை இருப்பதில்லை.
 • மையநோக்கு விசை என்பது பிற விசைகளோடுகூடப் பொருளின் மீது செலுத்தப்படும் ஒரு தனிப்பட்ட விசையே இல்லை; மாறாக, சீரான நேர்த்திசைவேகத்துடன் ஒரு வட்டப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின்மீது செலுத்தப்படும் அனைத்து விசைகளின் தொகுவிசையே ஆகும்.

விசையின் அலகு[தொகு]

விசையின் அலகு நியூட்டன் (N) ஆகும். ஒரு நியூட்டன் என்பது ஒரு கிலோ கிராம் எடையுள்ள பொருளொன்றின் மீது ஒரு மீ/செக்2 முடுக்கத்தைத் தோற்றுவிக்கும் விசையாகும்.

அடிப்படை விசையின் வகைகள்[தொகு]

விசை என்பது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும்.அவை

 • பலவீனமான விசை,
 • வலுவான விசை,
 • மின்காந்த விசை,
 • ஈர்ப்பு விசை ஆகும்.

இவையே அடிப்படை விசைகளாகும்.

பலவீனமான விசை[தொகு]

துணை அணுக்களிலும், மாலிக்குகளின் இடையே ஏற்படும் விசையே பலவீனமான விசை ஆகும்.

வலுவான விசை[தொகு]

அணு உட்கருவில் உள்ள ஈர்ப்பு விசையே வலுவான விசை ஆகும்.இது புவியீர்ப்பு விசையை விட 40 சதவிகிதம் அதிகம் ஆகும்.

மின்காந்த விசை[தொகு]

மின் மற்றும் காந்த பொருட்களின் மீது உண்டாகும் விசை மின்காந்த விசையாகும்.

ஈர்ப்பு விசை[தொகு]

இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை ஈர்ப்பு விசையாகும்.

அடிப்படை அல்லாத விசைகள்[தொகு]

அழுத்துவதனால் உண்டகும் விசை,முறுக்குதலினால் உண்டாகுவது, மீள்தன்மை விசை, இயல்பான விசை, ஈர்ப்பு விசை,மற்றும் உராய்வு விசை ஆகியன அடிப்படை அல்லாத விசைகளாகும்.

உராய்வு விசை[தொகு]

உராய்வு விசை என்பது ஒரு இயக்கத்திற்கு எதிராகச் செயற்படும் மேற்பரப்பு விசை ஆகும். உராய்வு விசையில் நிலையான உராய்வு, இயக்க உராய்வு என இரு வகைகள் உள்ளன.

விசையை பகுத்தல்[தொகு]

ஒரு விசையை இரு கூறுகளாகப் பகுக்கமுடியும். இதை, விசையைப் பகுத்தல் (Resolution of a force) எனக் கூறலாம். புள்ளி ஒன்றில் செயல்படும் இரு விசைகளின் தெகுபயன் விசையினை இணைகர விதியிலிருந்து காணமுடியும். அதுபோல் விசையினை இரு கூறுகளாக பிரிக்கமுடியும். பலவாறாக இதனை பெறமுடியும். இதற்கு விசையின் -திசை அளவு- தெடக்கப் பள்ளியில் ஒரு கிடைக்கோடு வரையப்படுகிறது. விசைக்கும் கிடைக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ என்று கொள்வோம். இந்நிலையில் விசையில் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு செங்குத்துக் கோடு வரையப்படுகிறது. எக்சு மற்றும் ஒய் அச்சுகளுக்குப் இணையாக இரு கோடுகள் விசையின் தலைப் பகுதியைத் தொட்டு இருக்குமாறு ஒரு நாற்கரத்தினை வரையவும். விசையை (F) ஒன்றிற்கொன்று செங்குத்தாக உள்ள இரு கூறுகளாகப் (Fcosθ, Fsinθ) பகுக்கமுடியும்.

மேலும் படிக்க[தொகு]

 • Corben, H.C.; Philip Stehle (1994). Classical Mechanics p 28,. New York: Dover publications. ISBN 0-486-68063-0. 
 • Cutnell, John d.; Johnson, Kenneth W. (2003). Physics, Sixth Edition. Hoboken, NJ: John Wiley & Sons Inc.. ISBN 0471151831. 
 • Feynman, R. P., Leighton, R. B., Sands, M. (1963). Lectures on Physics, Vol 1. Addison-Wesley. ISBN 0-201-02116-1. 
 • Halliday, David; Robert Resnick; Kenneth S. Krane (2001). Physics v. 1. New York: John Wiley & Sons. ISBN 0-471-32057-9. 
 • Parker, Sybil (1993). Encyclopedia of Physics, p 443,. Ohio: McGraw-Hill. ISBN 0-07-051400-3. 
 • Sears F., Zemansky M. & Young H. (1982). University Physics. Reading, MA: Addison-Wesley. ISBN 0-201-07199-1. 
 • Serway, Raymond A. (2003). Physics for Scientists and Engineers. Philadelphia: Saunders College Publishing. ISBN 0-534-40842-7. 
 • Tipler, Paul (2004). Physics for Scientists and Engineers: Mechanics, Oscillations and Waves, Thermodynamics (5th ed.). W. H. Freeman. ISBN 0-7167-0809-4. 
 • Verma, H.C. (2004). Concepts of Physics Vol 1. (2004 Reprint ed.). Bharti Bhavan. ISBN 8177091875. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசை&oldid=2292241" இருந்து மீள்விக்கப்பட்டது