நியூட்டனின் முதலாவது விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூட்டனின் நகர்ச்சி விதிகள் பற்றி நியூட்டன் அவர்கள் 1687ல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் எழுதியுள்ளார்.

நியூட்டனின் முதலாவது விதி (Newton's first law: law of inertia) என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி ஐசாக் நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் முதலாவதாகும். இவ்விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: "ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்". இவ் விதியை ஐசாக் நியூட்டன் 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் எழுதியுள்ளார்.

ஐசாக் நியூட்டனின் முதல் விதியின் இலத்தீன் மொழிக் கூற்று:

Lex I: Corpus omne perseverare in statu suo quiescendi vel movendi uniformiter in directum, nisi quatenus a viribus impressis cogitur statum illum mutare.

நியூட்டனின் முதல் விதியை அசையாநிலை விதி (law of inertia) என்பர். அதாவது விசை ஏதும் இல்லை என்றால் ஒரு பொருளானது தன் நிலையிலேயே (அசையாமலோ, தான் ஒரே சீரான விரைவோடு சென்றுகொண்டிருந்த நிலையிலோ) இருக்கும் என்பதாகும்.

உரை : ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது. பொருளின் இந்த பண்பே நிலைமம் எனப்படுகிறது. நிலைமம் பற்றி அறிய இவ்விதி உதவுகிறது.

பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை[தொகு]

இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு மட்டுமே பொருந்தும்; நிலைமம்-சாரா குறிப்பாயங்களுக்கு பொருந்தாது. இந்த விதி விசையை ஒரு பண்பறி அளவில் வரையறுக்கின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]