வெளி
வெளி (Space) என்பது எழுத்துகளையோ சொற்களையோ இலக்கங்களையோ நிறுத்தக்குறிகளையோ பிரிப்பதற்காக வழங்கப்படும் வெற்றுப்பரப்பு ஆகும்.[1]
பண்டைய காலத்தில், சொற்களைப் பிரிப்பதற்காக இலத்தீன் மொழியில் மையப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர், கி. பி. 200 அளவில் தொடருரையின் தாக்கத்தினால் சொற்பிரிப்புகளேயின்றிச் சொற்கள் எழுதப்பட்டன. அதன் பின்னர், கி. பி. 600-800 காலப்பகுதியில் சொற்களைப் பிரிப்பதற்காக வெற்று வெளிகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. அதிலிருந்து இலத்தீன் நெடுங்கணக்கை அடிப்படையாகக் கொண்ட மொழிகளிலும் வெளிகள் பயன்படுத்தப்பட்டன.
பயன்பாடுகள்
[தொகு]சொற்களுக்கிடையிலான வெளி
[தொகு]தமிழ் மொழியிலும் புதிய ஆங்கிலத்திலும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது தமிழ் விக்கிப்பீடியா.
This is Tamil Wikipedia.
ஆனால், எல்லா மொழிகளும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகளைப் பயன்படுத்துவதில்லை (எ-டு: நவீன சீனம், சப்பானியம்).
சொற்றொடர்களுக்கிடையிலான வெளி
[தொகு]பொதுவாக, சொற்றொடர்களுக்கிடையில் விடப்படும் வெளிகள் மூன்று வகைகளில் விடப்படும். சொற்றொடர்களுக்கிடையில் ஒரு வெளியோ இரு வெளியோ ஓரகல வெளியோ விடப்படுவதுண்டு. சொற்றொடர்களுக்கிடையில் வெளிகளை விடாதும் எழுதுவதுண்டு.
வெளிகளும் அலகுக் குறியீடுகளும்
[தொகு]ஆங்கிலத்தில் குறியீடுகளை எழுதும்போது முன்னொட்டுக் குறியீடுகளுக்கும் அலகுக் குறியீடுகளுக்கும் இடையே வெளி விடப்படுவதில்லை.
15 cm
13 kPa
235 ml
அளவுக்கும் எழுத்தை முதலாகக் கொண்ட குறியீட்டுக்கும் இடையே ஒரு வெளி விடப்பட வேண்டும்.
அதாவது,
45kg-தவறு
45 kg-சரி
குறியீட்டில் முதலில் எழுத்தில்லாவிடின், அளவுக்கும் குறியீட்டுக்கும் வெளி விடாமலும் எழுதலாம்.
32° C-தவறு
32°C-சரி
32 °C-சரி
ஆனாலும் கோணங்களின் பெறுமானத்தைக் குறிக்கும்போது வெளி விடக்கூடாது.
90 °-தவறு
90°-சரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வெளி (ஆங்கில மொழியில்)
- ↑ ["மையப் புள்ளி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26. மையப் புள்ளி (ஆங்கில மொழியில்)]