மிச்சைல் மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிச்சைல் மாதா
துர்கா மாதா/ சித்தோ மாதா
சண்டி மாதா/காளி மாதா
மலை வாழிடம்
மிச்சைல் மாதா is located in Jammu and Kashmir
மிச்சைல் மாதா
மிச்சைல் மாதா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்துவார் மாவட்டத்தில் மிச்சைல் கிராமாத்தில் மிச்சைல் மாதா கோயிலின் அமைவிடம்
மிச்சைல் மாதா is located in இந்தியா
மிச்சைல் மாதா
மிச்சைல் மாதா
மிச்சைல் மாதா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°25′04″N 76°20′41″E / 33.41778°N 76.34472°E / 33.41778; 76.34472ஆள்கூறுகள்: 33°25′04″N 76°20′41″E / 33.41778°N 76.34472°E / 33.41778; 76.34472
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்கிஷ்துவார்
பெயர்ச்சூட்டுஉயர்ந்த மலைகள்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்2,958 m (9,705 ft)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.machelmata.com

மச்சைல் மாதா (Machail Mata), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்துவார் மாவட்டத்தின் மச்சைல் கிராமத்தில் உள்ள மச்சைல் எனும் துர்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இமயமலையில் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ள பத்தர் சமவெளியில், 2958 மீட்டர் உயரத்தில், செனாப் ஆற்றின் கிளையான சந்திரபாகா ஆற்றின் கரையில் மச்சைல் கிராமத்தில், மச்சைல் மாதா கோயில் அமைந்துள்ளது. இது ஒரு மலை வாழிடமாகும். மேலும் இங்கு வெந்நீர் ஊற்றுகள் உள்ளது. நாக வழிபாடு செய்யும் போத் இன மக்களும்,[1]தாக்கூர் இன மக்களும் அதிகம் வாழ்கின்றனர்.

மச்சைல் மாதா யாத்திரை[தொகு]

ஆண்டுதோறும் ஜம்முவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மச்சைல் மாதாவை வழிபட யாத்திரை மேற்கொள்கின்றனர்[2]

போக்குவரத்து[தொகு]

2958 மீட்டர் உயரத்தில் உள்ள மிச்சைல் மாதா கோயில், ஜம்மு நகரத்திலிருந்து 290 கிமீ தொலைவிலும், கிஷ்துவார் நகரத்திலிருந்து 66 கிமீ தொலைவிலும் உள்ளது. மச்சைல் மாதா மலைக் கோயிலின் அடிவாரமான குலாப்கர் எனுமிடத்திலிருந்து, கால்நடையாகவோ அல்லது குதிரையில் மீதேறி 32 கிமீ மலையில் பயணம் செய்து மச்சைல் மாதா கோயிலை அடையலாம். மலைப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்கும், உண்பதற்கும் தொண்டு நிறுவனங்கள் பல இடங்களில் முகாம்கள் அமைத்துள்ளன.[3] இம்மலைக் கோயிலுக்கு செல்ல, அடிவாரமான குலாப்காரிலிருந்து உலங்கு வானூர்திகள் சேவை உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்சைல்_மாதா&oldid=3254098" இருந்து மீள்விக்கப்பட்டது