ரஜௌரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஜௌரி மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
தலைமையிடம்ரஜௌரி
பரப்பளவு
 • மொத்தம்2
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்642
 • அடர்த்தி240
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது & காஷ்மீரி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்http://rajouri.nic.in

ரஜௌரி மாவட்டம் (Rajouri district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ரஜௌரி நகரத்தில் உள்ளது. ரஜௌரி மாவட்டம் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக ரஜௌரி ஜம்முவிலிருந்து 154 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து 174 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகே அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

ரஜௌரி மாவட்டத்தின் மேற்கில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடும், வடக்கில் பூஞ்ச் மாவட்டம், தெற்கில் உதம்பூர் மாவட்டம் கிழக்கில் ரியாசி மாவட்டம், வடகிழக்கில் குல்காம் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. [2]

புவியியல்[தொகு]

ரஜௌரி மாவட்டம் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

ரஜௌரி மாவட்டம் மஞ்சகோட், கவாஸ், தாரியத், கிலா தார்வால், லரோகா, பேரி பட்டான் மற்றும் சியாட் எனும் ஏழு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. [3][4]கிராமப்புற வளர்ச்சிக்காக இம்மாவட்டம், ரஜௌரி, தார்ஹல், சுந்தர்பனி, டூங்கி, நவ்சரா காலகோட், தன்னமண்ட்டி, புத்தல் மற்றும் மஞ்சக்கோட் எனும் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

ரஜௌரி மாவட்டம் நவ்சரா, தார்ஹல், ரஜௌரி மற்றும் காலகோட் எனும் நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரஜௌரி மாவட்ட மக்கள் தொகை 642,415 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 345,351 ஆகவும், பெண்கள் 297,064 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 244 வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி படிப்பறிவு விகிதம் 68.17% ஆக உள்ளது. ஆண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர் 78.13% ஆகவும், பெண்களில் 56.57% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 860 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 108,271 ஆக உள்ளனர். [6]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாமியர் 402,879 ஆகவும், இந்துக்கள் 221,880ஆகவும், சீக்கியர்கள் 15,513 ஆகவும், கிறித்தவர்கள் 983 ஆகவும் உள்ளனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜௌரி_மாவட்டம்&oldid=2973610" இருந்து மீள்விக்கப்பட்டது