ஸ்ரீநகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீநகர் மாவட்டம்
மாவட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
பரப்பளவு
 • மொத்தம்141 km2 (54 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,69,751
 • அடர்த்தி9,000/km2 (23,000/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+05:30)
இணையதளம்http://srinagar.nic.in/

ஸ்ரீநகர் மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். ஸ்ரீநகர் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. காஷ்மீர் சமவெளியின் நடுவில் அமைந்த ஸ்ரீநகர் மாவட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஜம்மு மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது. [1] [2] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகராக ஸ்ரீநகர் உள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டம், வடக்கே காந்தர்பல் மாவட்டம், கிழக்கே அனந்தநாக் மாவட்டம், தென்கிழக்கில் புல்வாமா மாவட்டம், தென்மேற்கில் பட்காம் மாவட்டம் மற்றும் மேற்கில் பாரமுல்லா மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டம், ஸ்ரீநகர் தெற்கு வட்டம் மற்றும் ஸ்ரீநகர் வடக்கு வட்டம் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு ஊராட்சி ஒன்றியம் கொண்டுள்ளது. [3]

அரசியல்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டம், ஹஸ்ரத்பால், ஜாடிபால், ஈத்கா, கான்யார், ஹப்பாகடல், அமீராகடல், சோன்வர் பாக் மற்றும் பட்மலூ என எட்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. [4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஸ்ரீநகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,269,751 ஆக உள்ளது. [2] இந்தியாவின் 640 மாவட்டங்களில், ஸ்ரீநகர் மாவட்டம் மக்கள் தொகை அடிப்படையில் 381 வது இடத்தில் உள்ளது. [2] இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 703 வீதம் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். ஸ்ரீநகர் மாவட்டத்தின் எழுத்தறிவு 71.21% ஆக உள்ளது.[5]

சமயம்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டத்தில் இசுலாமியர்கள் 95.19 விழுக்காடும், சீக்கியர்கள் 0.99 விழுக்காடும், இந்துக்கள் 3.44 விழுக்காடும், மற்றவர்கள் 0.38 விழுக்காடுமாக உள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஹஸ்ரத்பால் தர்கா, ஜாமியா மசூதி, ஷா ஹமதான் மசூதி, சீக்கியர்களின் முக்டூம் குருத்துவாரா, ஜேஷ்டாதேவி கோயில் மற்றும் [1] பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம், சங்கராச்சாரியர் கோயில்கள் உள்ளது.

சுற்றுலா தலங்கள்[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தால் ஏரியில் படகு சவாரி செய்தல், தால் ஏரியில் அமைந்துள்ள படகு வீடுகளில் தங்குதல் ஆகும். மேலும் ஸ்ரீநகரில் உள்ள மொகலாயர்கள் அமைத்த வண்ணமிகு பூக்கள் கொண்ட ஷார்லிமர் போன்ற தோட்டங்கள் பல உள்ளது.

ஸ்ரீநகர் மாவட்டத்தின் தால் ஏரியின் அகலப்பரப்புக் காட்சி

தட்ப வெப்ப நிலை[தொகு]

ஸ்ரீநகர் மாவட்டத்தின் வெப்பநிலை திசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூச்சியம் பாகைக்கு கீழ் சென்று விடுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்ரீநகர் (1971 – 1986)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 7.0
(44.6)
8.2
(46.8)
14.1
(57.4)
20.5
(68.9)
24.5
(76.1)
29.6
(85.3)
30.1
(86.2)
29.6
(85.3)
27.4
(81.3)
22.4
(72.3)
15.1
(59.2)
8.2
(46.8)
19.7
(67.5)
தாழ் சராசரி °C (°F) −2.0
(28.4)
−0.7
(30.7)
3.4
(38.1)
7.9
(46.2)
10.8
(51.4)
14.9
(58.8)
18.1
(64.6)
17.5
(63.5)
12.1
(53.8)
5.8
(42.4)
0.9
(33.6)
−1.5
(29.3)
7.3
(45.1)
பொழிவு mm (inches) 48
(1.89)
68
(2.68)
121
(4.76)
85
(3.35)
68
(2.68)
39
(1.54)
62
(2.44)
76
(2.99)
28
(1.1)
33
(1.3)
28
(1.1)
54
(2.13)
710
(27.95)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6.6 7.3 10.2 8.8 8.1 5.7 7.9 6.8 3.5 2.8 2.8 5.1 75.6
ஆதாரம்: HKO[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீநகர்_மாவட்டம்&oldid=3573611" இருந்து மீள்விக்கப்பட்டது