சேக் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் அப்துல்லா
3வது சம்மு காசுமீர் முதல்வர்
பதவியில்
25 பெப்ரவரி 1975 – 26 மார்ச் 1977
முன்னையவர்சயீத் மீர் காசிம்
பின்னவர்ஆளுநரின் ஆட்சி
பதவியில்
9 சூலை 1977 – 8 செப்டம்பர் 1982
முன்னையவர்ஆளுநரின் ஆட்சி
பின்னவர்பாரூக் அப்துல்லா
2வது சம்மு காசுமீர் பிரதமர்
பதவியில்
5 மார்ச் 1948 – 9 ஆகத்து 1953
முன்னையவர்மெகர் சந்த் மகசன்
பின்னவர்பக்சி குலாம் முஹம்மது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 திசம்பர் 1905[1]
சௌரா, காஷ்மீர், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1982 (அகவை 76)[1]
சிறிநகர், காசுமீர்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
துணைவர்பேகம் அக்பர் ஜகான் அப்துல்லா
பிள்ளைகள்பாரூக் அப்துல்லா
முன்னாள் கல்லூரிஇசுலாமியாக் கல்லூரி, இலாகூர்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்[2]

சேக் முஹம்மது அப்துல்லா (Sheikh Mohammed Abdullah, 5 திசம்பர் 1905 – 8 செப்டம்பர் 1982) இந்தியாவின் வடகோடி மாநிலமான சம்மு காசுமீர் அரசியலில் முதன்மை பங்களித்த இந்திய அரசியல்வாதி ஆவார். "சேர்-இ-காசுமீர்" (காசுமீரின் சிங்கம்) என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்ட அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சி நிறுவிய தலைவரும் மூன்று முறை சம்மு காசுமீர் முதல்வராக பணியாற்றியவருமாவார். மகாராசா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக குரலெழுப்பி காசுமீரில் தன்னாட்சி ஏற்பட போராடினார்.

1947ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது இம்மாநில பிரதமராக பொறுப்பில் இருந்தார்.[3] ஆகத்து 8, 1953இல் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு பக்சி குலாம் மொகமது புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்துல்லா சிறை செய்யப்பட்டு மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். தமிழகத்தின் கொடைக்கானல் மலைத்தலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1965இல் ‘சதர்-ஏ-ரியாசத்’திற்கு மாற்றாக ஆளுநரையும் ‘பிரதமருக்கு’ மாற்றாக முதல்வரையும் பயன்படுத்த அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.[4] 1974ஆம் ஆண்டில் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி மீண்டும் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். செப்டம்பர் 8, 1982இல் தமது மரணம் வரை தொடர்ந்து முதல்வராக நீடித்தார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Hoiberg, Dale H. (2010) p 22-23
  2. Tej K. Tikoo (19 சூலை 2012). Kashmir: Its Aborigines and Their Exodus. Lancer Publishers. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-935501-34-3. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2013. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  3. Lamb, Alastair. The Myth of Indian Claim to Jammu and Kashmir: A Reappraisal. World Kashmir Freedom Movement.
  4. Noorani, A.G. (2011). Article 370 : a constitutional history of Jammu and Kashmir (1. publ. ed.). New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198074083.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_அப்துல்லா&oldid=3848978" இலிருந்து மீள்விக்கப்பட்டது