லித்தர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லித்தர் பள்ளத்தாக்கில் பாயும் லித்தர் ஆறு
பகல்கம் நகரத்தில் பாயும் லித்தர் ஆறு

லித்தர் ஆறு (Lidder river or Liddar river), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். 73 கிலோமீட்டர் நீளம் கொண்ட லித்தர் ஆறு காசுமீர் பகுதியில் உள்ளது. கோல்கோய் பனியாற்றில் உற்பத்தியாகும் இது 1615 மீட்டர் உயரத்தில் மீர்குந்த் கானாபால் என்னுமிடத்தில், சீலம் ஆற்றில் கலக்கிறது.[1][2]

புவியியல்[தொகு]

சம்மு காசுமீரின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமான சோன்மார்க்கின் அருகிலுள்ள கோல்கோய் பனியாற்றில் இவ்வாறு உற்பத்தியாகி லித்தர் சமவெளியை உருவாக்குகிறது. அனந்தநாக் மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலாத் தலமான அரு பிரதேசத்தின் லித்தர்வாத் சமவெளியில் ஆல்பைன் புல்வெளிகள் வழியாக தெற்கு நோக்கி ஓடுகிறது. இதனால்தான் இந்த ஆற்றின் பெயர் லித்தர் ஆறு என அழைக்கப்பட்டது. இது பகல்காமை அடைவதற்கு முன்பு 30 கிலோமீட்டர் (19 மைல்) பரப்பளவை உள்ளடக்கி ஓடுகிறது. சேசுநாக் ஏரியிலிருந்து தோன்றும் கிழக்கு லித்தர் ஆற்றின் முக்கிய துணை நதியாக கருதப்படும் இது பின்னர் இங்கிருந்து மேற்கு நோக்கி பாய்ந்து அனந்தநாக்கிற்கு அருகில் உள்ள மிர்குந்த் கனபாலில் படிக நீலநிறமான நீரோடு சீலம் நதியை சென்றடைகிறது. லித்தர் சமவெளியின் மையத்தில் பகல்காம் அமைந்துள்ளது.[3].

பொருளாதாரப் பயன்[தொகு]

லித்தர் ஆற்றின் நீர் முக்கியமாக நீர்ப்பாசன நோக்கத்திற்காக வெவ்வேறு கால்வாய்கள் வழியாகவும், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. மேலும் ஆற்றின் கரையில் மீன்வளர்ப்பு மையம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. லிடர் ஆற்றில் காணப்படும் முக்கிய வகை மீன்கள் சில லித்தர் ஆற்றில் காணப்படுகின்றன[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "The geography of Jammu and Kashmir state". ikashmir.net.
  2. "Khanabal village of Kashmir". fallingrain.com.
  3. "Pahalgam The Lidder Valley". ghumakkar.com.
  4. "Gippsland Aquaculture Industry Network-Gain". growfish.com.au. மூல முகவரியிலிருந்து 20 February 2012 அன்று பரணிடப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்தர்_ஆறு&oldid=2784051" இருந்து மீள்விக்கப்பட்டது