உள்ளடக்கத்துக்குச் செல்

ரண்பீர்சிங் புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ரண்பீர்சிங் பொரா
ரண்பீர்சிங் புரா
நகரம்
நாடு இந்தியா
ஜம்மு காஷ்மீர்சம்மு காசுமீர்
மாவட்டம்ஜம்மு மாவட்டம்
அரசு
 • வகைநகர் மன்றம்
ஏற்றம்
270 m (890 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்13,563
மொழிகள்
 • அலுவலக மொழிஉருது
 • இரண்டாம் மொழிடோக்கிரி, பஞ்சாபி
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

ரண்பீர் சிங் புரா (Ranbir Singh Pora or R. S. Pura) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு மாவட்டத்தில் 886 மீட்டர் உயரத்தில் அமைந்த நகரம். இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ள நகராகும். இதனால் இந்திய இராணுவத்தின் முக்கிய மையமாகவும் திகழ்கிறது. இந்நகரத்தில் டோக்கிரி மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

பெயர்க் காரணம்[தொகு]

ஜம்மு காஷ்மீர் மன்னர் ரண்பீர் சிங் நினைவாக இந்நகருக்கு ரண்சிங் புரா எனப் பெயராயிற்று.

பொருளாதாரம்[தொகு]

ரண் சிங் புராவின் முக்கிய பொருளாதாரம், வேளாண் தொழில், பால் பண்ணை பொருட்கள் உற்பத்தியில் சார்ந்துள்ளது. பாசுமதி அரிசி, கோதுமை, கடுகு, காய்கறிகள் ஆகியன பயிரிடப்படுகின்றன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ரண்பிர் சிங் புராவின் மக்கட்தொகை 15,197. 1000 ஆண்களுக்கு 810 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது. எழுத்தறிவு 86.06% விழுக்காடாக உள்ளது.[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரண்பீர்சிங்_புரா&oldid=2142724" இலிருந்து மீள்விக்கப்பட்டது