கரண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரண் சிங்
کرن سنگھ
Dr-Karan-Singh-sept2009.jpg
கரண் சிங்
இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 2012
பதவியில்
சனவரி 2006 – சனவரி 2012
பதவியில்
சனவரி 2000 – சனவரி 2006
பதவியில்
நவம்பர் 1996 – ஆகஸ்டு 1999
இந்திய மக்களவை உறுப்பினர்
உதம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1967 - 1970
1971 - 1977
1977 - 1980
1980 - 1984
பின்வந்தவர் கிரிதாரி லால் டோக்ரா
சுற்றுலா & விமானப் போக்குவரத்து அமைச்சர்,
இந்திய அரசு
பதவியில்
1967 - 1973
சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர்,
இந்திய அரசு
பதவியில்
1973 - 1977
கல்வி & பண்பாட்டுத் துறை அமைச்சர், இந்திய அரசு
பதவியில்
1979 - 1980
அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவர்
பதவியில்
1989 - 1990
முன்னவர் பி. கே. கௌல்
பின்வந்தவர் ஆபித் உசைன்
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஆளுநர்
பதவியில்
17 நவம்பர் 1952 – 30 மார்ச் 1965
முன்னவர் ஹரி சிங்
பின்வந்தவர் பதவி ஒழிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஆளுநர்
பதவியில்
30 மார்ச் 1965 – 15 மே 1967
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் பகவான் சகாய்
தனிநபர் தகவல்
பிறப்பு 9 மார்ச்சு 1931 (1931-03-09) (அகவை 92)
கேனிஸ், பிரான்சு
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) யசோ இராச்சிய இலக்குமி
இருப்பிடம் புதுதில்லி
சமயம் இந்து சமயம்
கையொப்பம்

கரண் சிங் (Karan Singh) (9 மார்ச் 1931), ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங்கின் மகன் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகவும்,[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய அரசின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.[2]பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் கஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர்.[3]

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறும் என கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.[4]

இளமையும் கல்வியும்[தொகு]

இராசபுத்திர டோக்ரா வம்சத்தில் பிறந்த கரண் சிங், பள்ளிக் கல்வியை டேராடூனில் உள்ள டூன் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை கஷ்மீர் பல்கலைக்கழகத்திலும், அரசியல் அறிவியலில் முதுநிலை படிப்பு மற்றும் முனைவர் படிப்பை தில்லி பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்.[5]

குடும்பம்[தொகு]

கரண்சிங்கிற்கு யசோ இராச்சிய இலக்குமி எனும் மனைவியும், அஜாத சத்ரு எனும் மகனும், ஜோத்சனா எனும் மகளும் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

இவரது சீரிய குடியியல் பணியைப் பாராட்டி இந்திய அரசு, 2005இல் பத்ம விபூசன் விருது வழங்கியது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr. Karan Singh பரணிடப்பட்டது 2016-09-03 at the வந்தவழி இயந்திரம் Raj Bhawan, Jammu and Kashmir official website.
  2. Karan echoes Omar, but ‘J&K part of India’ பரணிடப்பட்டது 2011-01-21 at the வந்தவழி இயந்திரம், Arun Sharma, Jammu, Sat 23 October 2010, The Indian Express Limited
  3. பிரிவினைவாதிகளுடன் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கரண் சிங்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. '370 ரத்தால் சாதக அம்சங்கள்'; காங்., மூத்த தலைவர் கரண் சிங் வரவேற்பு
  5. "Dr. Karan Singh Profile]". Doon School. 2009-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  6. Padma Vibhushan

மேலும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரண் சிங்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்&oldid=3355622" இருந்து மீள்விக்கப்பட்டது