உள்ளடக்கத்துக்குச் செல்

அலி அக்பர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி அக்பர் கான்
Ali Akbar Khan
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1922-04-14)ஏப்ரல் 14, 1922
பிறப்பிடம்கிழக்கு வங்காளம், இந்தியா
இறப்புசூன் 18, 2009(2009-06-18) (அகவை 87)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், சரோத் வாத்தியக் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்
இணைந்த செயற்பாடுகள்அலாவுதீன் கான், ஆசிசு கான், ரவி சங்கர்

அலி அக்பர் கான் (Ali Akbar Khan, வங்காளம்: আলী আকবর খাঁ, ஏப்ரல் 14, 1922ஜூன் 18, 2009), இந்துஸ்தானி இசைக் கலைஞரும் சரோத் வாத்தியக் கலைஞரும் ஆவார். இவர் கான்சாகிப் அல்லது உஸ்தாத் (மாஸ்டர்) என்றழக்கப்படுகிறார். மேற்குலகில் சித்தார் மேதை ரவி சங்கருடன் இணைந்து இந்திய இசையை பன்முகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 1956 ஆம் ஆண்டில் இவர் கல்கத்தாவில் ஒரு இசைக் கல்லூரியையும், 1967 இல் அலி அக்பர் இசைக்கல்லூரி என்ற பெயரில் ஒரு இசைக்கல்லூரியையும் ஆரம்பித்தார். இக்கல்லூரி தற்போது கலிபோர்னியாவில் சான் ரபாயெல் என்ற இடத்தில் இயங்குகிறது. இதன் கிளை நிறுவனம் சுவிடசர்லாந்தில் இயங்குகிறது. கான் பல இந்துஸ்தானி இராகங்களையும் அமைத்துள்ளார்[1].

இவரது தந்தை அலாவுதீன் கான் இடம் முறையாக இசைப்பயிற்சி பெற்ற அலி அக்பர் கான், 1955 ஆம் ஆண்டில் வயலின் இசைக்கலைஞர் யெகுடி மெகினின் அழைப்பின் பேரில் முதல் தடவையாக அமெரிக்கா வந்தார். பின்னர் அங்கேயே (கலிபோர்னியாவில்) குடியேறினார். கான் இந்தியாவின் பத்ம விபூசன் விருதை 1989 ஆம் ஆண்டில் பெற்றார். அத்துடன் ஐந்து முறை கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்[2].

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_அக்பர்_கான்&oldid=3289908" இலிருந்து மீள்விக்கப்பட்டது