உள்ளடக்கத்துக்குச் செல்

வி. நா. கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவேசுவர் நாத் கரே
33வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
19 திசம்பர் 2002 – 2 மே 2004
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னையவர்கோபால் வல்லப் பட்நாயக்
பின்னவர்எஸ். ராஜேந்திர பாபு
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
21 மார்ச் 1997 – 01 மே 2004
நியமிப்புசங்கர் தயாள் சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 மே 1939 (1939-05-02) (அகவை 85)
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

விசுவேசுவர் நாத் கரே (Vishweshwar Nath Khare), இந்தியாவின் 33வது தலைமை நீதிபதியாக இருந்தார், 19 திசம்பர் 2002 முதல் 2 மே 2004 வரை பணியாற்றினார். இவர் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு 21 மார்ச் 1997 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கரே, அலகாபாத்தில் 2 மே 1939 இல் பிறந்தார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அலகாபாத்தில் கழித்தார். மேலும், அலகாபாத் புனித சூசையப்பர் கல்லூரியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார். கரே முதல் வகுப்பு துடுப்பாட்ட வீரர் ஆவார், 1958இல் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் உத்தரபிரதேச மாநிலத்திற்காக விளையாடினார்.

சட்டத் தொழில்

[தொகு]

1961 இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், உத்தரபிரதேச அரசின் தலைமை நிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 25 சூன் 1983இல், இவர் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார்.

நெருக்கடி நிலை

[தொகு]

1975 இல் வழக்கறிஞராக, இவரும் இவரது மாமா எஸ். சி கரே ஆகியோர் தேர்தல் முறைகேடுகளைக் குற்றம் சாட்டி ராஜ் நாராயணனுக்கு எதிரான புகழ்பெற்ற வழக்கில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை பிரதிநிதித்துவப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற வழக்கை நடத்தும் பொறுப்பு இவருக்கு இருந்தது.[1] இதன் மூலம் 1947இல் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியலமைப்பில் நெருக்கடி நிலை ஏற்பட உச்ச நீதிமன்றத்தின் முடிவு வழிவகுத்தது.

குஜராத் வன்முறை

[தொகு]

இவர், இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் கோத்ரா தொடருந்து எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு நீதி அமைப்பு தோல்வியை எதிர்கொண்டதாகக் கூறினார். பெஸ்ட் பேக்கரி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான இவரது முடிவு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில உதவிகளை வழங்கியது.[2]

ஓய்வுக்குப் பின்

[தொகு]

இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கரே தேசியத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் நீதித்துறை பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார்.[3] ஜெசிகா லால் கொலை வழக்கு குறித்த இவரது கருத்துக்கள் குஜராத் கலவரத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை எதிரொலித்தன. இவர் சார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.[4]

விருதுகள்

[தொகு]

2006ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம விபூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. குல்தீப் நய்யார் 1977. The judgment: Inside story of the emergency in India. Vikas Publishing House.
  2. "National : I raised the image of judiciary: V.N. Khare". தி இந்து. 2004-05-02. Archived from the original on 24 June 2004. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  3. "Justice after Jessica Lall". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  4. "Justice V.N.Khare". Cuj.ac.in. Archived from the original on 2 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "V. N. Khare". Supremecourtofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._நா._கரே&oldid=3841982" இலிருந்து மீள்விக்கப்பட்டது