உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெசிகா லால் கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெசிகா லால்
பிறப்பு(1965-01-05)5 சனவரி 1965
இந்தியா இந்தியா
இறப்பு29 ஏப்ரல் 1999(1999-04-29) (அகவை 34)
புதுதில்லி  இந்தியா
பணிமாடல், பணிப்பெண்

ஜெசிகா லால் புதுதில்லியில் பினா ரமணி என்பவருக்குச் சொந்தமான உணவு விடுதி ஒன்றில் மது பானம் பறிமாறும் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். 29.09.1999 அன்று விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்று உணவு விடுதியில் நடைபெற்றது. இரவு இரண்டு மணியளவில் விடுதிக்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா ஜெசிகாவிடம் மது பானம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். அதனால் கோபமடைந்த மனுசர்மா தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் ஜெசிகா லால் படுகாயமடைந்து அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.[1]

பிப்ரவரி 2006 இல் விசாரணை நீதிமன்றம் மனுசர்மாவை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக திசம்பர் 2006 இல் தீர்ப்பளித்தது.[2] உச்சநீதிமன்றத்தில் மனுசர்மா மேல்முறையீட்டு மனுச் செய்திருந்தார். 19.04.2010 உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தண்டனையை உறுதி செய்தது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பினா ரமணியும் அவரது மகள் மாலினி ரமணியும் நடந்த சம்பவங்களை விவரித்து, மனு சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளப்படுத்தினர். தங்களுக்குப் பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் இந்தியாவின் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றவாளி மனுசர்மாவிற்கு ஆதரவாக வாதாடினார்.

திரைவடிவம்

[தொகு]

இந்தி மொழியில், ’நோ ஒன் கில்டு ஜெசிகா’ (No One Killed Jessica) என்ற தலைப்பில், ஜெசிகா லால் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட ராணி முகர்ஜி நடித்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Murder of a Model பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் இந்தியா டுடே, 17 May 1999.
  2. Singh, Sanghita (20 December 2006). "Manu Sharma gets life term". Mumbai: DNA. பார்க்கப்பட்ட நாள் 2006-12-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிகா_லால்_கொலை_வழக்கு&oldid=3480581" இலிருந்து மீள்விக்கப்பட்டது