ராம் ஜெத்மலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம் ஜெத்மலானி
Ram Jethmalani.jpg
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
ராஜஸ்தான் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
சூன் 1999 – சூலை 2000
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் தம்பி துரை
பின்வந்தவர் அருண் ஜேட்லி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1998 – 14 சூன் 1999
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
இந்திய சட்டம்,நீதி மற்றும் வணிகநிறுவன விவகாரங்கள் அமைச்சர்
பதவியில்
16 மே 1996 – 1 சூன் 1996
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தனிநபர் தகவல்
பிறப்பு 14 செப்டம்பர் 1923 (1923-09-14) (அகவை 95)
சிகார்பூர், பிரித்தானிய இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) ரத்னா ஆர்.
இருப்பிடம் புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் எஸ்.சி. ஷகானி சட்டக்கல்லூரி, கராச்சி
தொழில் மூத்த வழக்கறிஞர், இந்திய உச்சநீதிமன்றம்
இணையம் http://www.ramjethmalani.com/

ராம் ஜெத்மலானி (Ram Jethmalani, இந்தி: राम जेठ्मलानी, சிந்தி): رام جيٺملاڻي பிறப்பு: செப்டம்பர் 14, 1923, இந்தியாவின் ஒரு முன்னணி வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.இந்திய சட்ட அமைச்சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பொறுப்பாற்றியிருக்கிறார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.

பாக்கித்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெத்மலானி தனது பதினெட்டாம் அகவையிலேயே சட்டப் படிப்பை முடித்து, இந்தியப் பிரிவினை வரை தனது சொந்த ஊரிலும் (தற்போதைய பாக்கித்தானில் உள்ளது), பிற்பாடு மும்பையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரத்தனா என்ற மனைவியும் (முதல் மனைவி 1947ல் திருமணம்), துர்க்கா என்ற மனைவியும் (2வது மனைவி) இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுள் மகேசு மற்றும் இராணி ஆகியோரும் பிரபலமான வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

மும்பையிலின்று இவர் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாச்பாயின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாச்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010 -ம் ஆண்டு மீண்டும் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த இவர், மாநிலங்களவைக்கு அக்கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார்.

இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராகவும் அறியப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_ஜெத்மலானி&oldid=2694411" இருந்து மீள்விக்கப்பட்டது