மு. தம்பிதுரை
Appearance
மு .தம்பிதுரை | |
---|---|
மக்களவை துணை சபாநாயகர் | |
பதவியில் 13 ஆகத்து 2014 – 25 மே 2019 | |
முன்னையவர் | கரிய முண்டா |
பின்னவர் | காலி |
பதவியில் 1985–1989 | |
முன்னையவர் | கோ. இலட்சுமணன் |
பின்னவர் | சிவ்ராஜ் பாட்டீல் |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவைகுழுத் தலைவர் | |
பதவியில் மே 2009 - மே 2019 | |
பிரதமர் |
|
கரூர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் | |
பதவியில் மே 2009 – மே 2019 | |
முன்னையவர் | கோ.ச. பழனிச்சாமி |
சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சர் | |
பதவியில் மார்ச் 1998 – ஏப்ரல் 1999 | |
தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் மார்ச் 1998 – ஏப்ரல் 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மார்ச்சு 1947 கிருட்டிணகிரி, இந்தியா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | பானுமதி தம்பிதுரை |
முன்னாள் கல்லூரி | சென்னை கிறித்துவக் கல்லூரி |
மு. தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். 16-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 முதல் 1989 வரை நாடாளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009, 2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.க வின் நாடாளுமன்றக்குழு தலைவராக உள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "துணை சபாநாயகர் ஆனார் தம்பிதுரை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 ஆகத்து 2014. p. 1. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
- ↑ "தினகரனில் தம்பிதுரை பற்றி". Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.
பகுப்புகள்:
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- கிருட்டிணகிரி மாவட்ட நபர்கள்
- 1947 பிறப்புகள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்