உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ் நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ் நாராயணன்
இந்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 1977 – சனவரி 1979
குடியரசுத் தலைவர்பசப்பா தனப்பா ஜாட்டி மற்றும் நீலம் சஞ்சீவ ரெட்டி
பிரதமர்மொரார்ஜி தேசாய்
பின்னவர்ரபி ராய்
தொகுதிரே பரேலி மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

ராஜ் நாராயணன் (Raj Narain, நவம்பர் 1917 - 31 டிசம்பர் 1986) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், லோக்பந்து என அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றவர். இதனால் இந்திரா காந்தி 1975-உல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க நேரிட்டது.[1] மேலும் நெருக்கடி நிலை காலத்தில் ராஜ் நாராயணன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மது லிமாயியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.[2]

1977-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியை, உத்தரப் பிரதேசத்தின் ரே பரலி மக்களவைத் தொகுதியில், இந்திரா காந்தியை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர்.[3] ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://indiatoday.intoday.in/story/1975-indira-gandhi-found-guilty/1/155592.html
  2. http://www.countercurrents.org/cip200610.htm
  3. Seema Chisti (2011-09-07). "Raj Narain vanishes from UP freedom fighters’ register". இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/raj-narain-vanishes-from-up-freedom-fighters--register/842875/0. பார்த்த நாள்: 2015-06-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_நாராயணன்&oldid=3771435" இலிருந்து மீள்விக்கப்பட்டது