உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மக்களவை உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ப.கமலா[தொகு]

ப.கமலா அவர்கள் 2024 மக்களவைத் தேர்தல் வேட்பாளர் விழுப்புரம் மாவட்டம் பகுதியில் போட்டியிடுகிறார் இவர் திருவள்ளுவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவைக்கு மாநிலம் வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து மக்கள் வாக்குகள் அளித்து மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அரசியல் கட்சியைச் சாராதவர்களாகவோ இருக்கின்றனர்.

மக்களவை உறுப்பினர் இருக்கைகள்[தொகு]

இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் மக்களவைக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் (தொகுதிகள்) குறித்த விபரங்கள் கொண்ட அட்டவணை.

வ.எண். மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதி இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்புகள்
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவை உறுப்பினர்
2 ஆந்திரப் பிரதேசம் 42 ஆந்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்கள்
3 அருணாச்சலப் பிரதேசம் 2 அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்
4 அசாம் 14 அசாம் மக்களவை உறுப்பினர்கள்
5 பீகார் 39 பீகார் மக்களவை உறுப்பினர்கள்
6 சண்டிகர் 1 சண்டிகர் மக்களவை உறுப்பினர்
7 சட்டீஸ்கர் 12* சட்டீஸ்கர் மக்களவை உறுப்பினர்கள்
8 தாதர் மற்றும் நாகர் ஹவேலி 1 தாதர் மற்றும் நாகர் ஹவேலி மக்களவை உறுப்பினர்
9 டாமன் மற்றும் டையூ 1 டாமன் மற்றும் டையூ மக்களவை உறுப்பினர்
10 கோவா 2 கோவா மக்களவை உறுப்பினர்கள்
11 குஜராத் 26 குஜராத் மக்களவை உறுப்பினர்கள்
12 அரியானா 10 அரியானா மக்களவை உறுப்பினர்கள்
13 இமாச்சலப் பிரதேசம் 4 இமாச்சலப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
14 ஜம்மு காஷ்மீர் 6 ஜம்மு காஷ்மீர் மக்களவை உறுப்பினர்கள்
15 ஜார்க்கண்ட் 14 ஜார்க்கண்ட் மக்களவை உறுப்பினர்கள்
16 கர்நாடகா 28 கர்நாடகா மக்களவை உறுப்பினர்கள்
17 கேரளா 21* கேரளா மக்களவை உறுப்பினர்கள்
18 இலட்சத் தீவுகள் 1 இலட்சத்தீவு மக்களவை உறுப்பினர்
19 மத்தியப் பிரதேசம் 29 மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
20 மகாராஷ்டிரா 48 மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள்
21 மணிப்பூர் 2 மணிப்பூர் மக்களவை உறுப்பினர்கள்
22 மேகாலயா 2 மேகாலயா மக்களவை உறுப்பினர்கள்
23 மிசோரம் 1 மிசோரம் மக்களவை உறுப்பினர்
24 நாகாலாந்து 1 நாகாலாந்து மக்களவை உறுப்பினர்
25 தில்லி 7 தில்லி மக்களவை உறுப்பினர்கள்
26 ஒரிசா 21 ஒரிசா மக்களவை உறுப்பினர்கள்
27 புதுச்சேரி 1 புதுச்சேரி மக்களவை உறுப்பினர்
28 பஞ்சாப் 13 பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்
29 இராஜஸ்தான் 25 இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள்
30 சிக்கிம் 1 சிக்கிம் மக்களவை உறுப்பினர்
31 தமிழ்நாடு 39 தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்
32 திரிபுரா 2 திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்
33 உத்திரப் பிரதேசம் 80 உத்திரப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
34 உத்தர்காண்ட் 5 உத்தர்காண்ட் மக்களவை உறுப்பினர்கள்
35 மேற்கு வங்காளம் 42 மேற்கு வங்காளம் மக்களவை உறுப்பினர்கள்
36 மொத்தம் 545 மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 543 உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும், 2 உறுப்பினர்கள் நியமனம் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியமன உறுப்பினர்கள்[தொகு]

  • மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையிலும் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவர் இருவர் மக்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்தும், மற்றொருவர் கேரளா மாநிலத்திலிருந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]