எஸ். ராஜேந்திர பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ராஜேந்திர பாபு என்பவா் இந்தியாவின் 34 வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா். இவர் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [1]

சுயசரிதை[தொகு]

எஸ். ராஜேந்திரா பாபு, பெங்களூரில்  1 ஜூன் 1939 அன்று பிறந்தார். கர்நாடக பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெல்காம் ராஜா ராஜ் லகமகூத சட்டக் கல்லூரியில் இருந்து தனது எல்.எல்.பி பட்டத்தை பெற்றாா்.

தொழில் வாழ்க்கை[தொகு]

1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அவர் செப்டம்பர் 25, 1997 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கருநாடகம்நியமிக்கப்பட்டார்.மே 2, 2004 அன்று உச்சநீதி மன்றத்தின் உயர்ந்த பியூஸ்னே நீதிபதியாக, நீதிபதி வி. என்.காரே இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவரது பதவி காலம் ஒரு மாதத்திற்கும் குறைவானது ஆகும். அவர் 2004 ஜூன் 01 அன்று தனது 65 வது பிறந்தநாளுக்கு ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தில் அவரது பதவிக்காலம் முடிந்தவுடன், பாபு சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், அரசியலமைப்பு சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், வரிவிதிப்பு, கார்ப்பரேட் சட்டம் மற்றும் அறிவுசார் சொத்து கருத்தகள் பாேன்றவற்றில் பல தரப்பு தீர்ப்புகளை வழங்கினார். இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் பாபு உளவியலை பகுப்பாய்வு செய்தார். அவர் 1986 ம் ஆண்டு முஸ்லீம் மகளிர் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் விதியையும் விளக்கினார்.

2007 ஏப்ரல் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்ஐந்தாவது  தலைவராக பதவி வகித்தார். அதாவது 31 மே 2009 வரை பதவி வகித்தார். 

நீதிதுறைக்கு பின்[தொகு]

பாபு தற்போது இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் ஐசிஐசிஐ தலைவர் (பேராசிரியர்) ராக உள்ளாா்.வேதாந்தாவில் அதிக ஆர்வமாக உள்ளவா். பாபு 25 ஆண்டுகளுக்கும் மேலாக  சமூக நல பணிக்காக பயிற்சியளித்து வருகிறார். அதுமட்டுமின்றி சர்வதேச மழலையா் சேவை சங்கத்தின் தலைவராக உள்ளாா்.

மரியாதை[தொகு]

2005 ல் கர்நாடகா பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜேந்திர_பாபு&oldid=2694425" இருந்து மீள்விக்கப்பட்டது