உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால் வல்லப் பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக்
2018இல் பட்நாயக்
32வது இந்திய தலைமை நீதிபதி
பதவியில்
8 நவம்பர் 2002[1] – 18 திசம்பர் 2002
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னையவர்பூபிந்தர் நாத் கிர்பால்
பின்னவர்வி. நா. கரே[2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 திசம்பர் 1937 (1937-12-19) (அகவை 86)
கட்டக், ஒடிசா, இந்தியா.
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
துணைவர்மீரா பட்நாயக்
பிள்ளைகள்அமர், ரிங்கு, அஞ்சன்
பெற்றோர்ராஷ்பிகாரி பட்நாயக் (தந்தை), பிதுலதா தேவி (தாய்)
முன்னாள் கல்லூரிஈவிங் கிறிஸ்த்துவக் கல்லூரி, அலகாபாத் பல்கலைக்கழகம்
ராவன்ஷா கல்லூரி
மதுசூதன் சட்டக் கல்லூரி
வேலைநீதிபதி
விருதுகள்உத்கல் ரத்னா 2021

நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக் (Justice Gopal Ballav Pattanaik) (பிறப்பு 19 டிசம்பர் 1937) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். பின்னர் ஒடிசா உயர் நீதிமன்ற அமர்வின் நிரந்தர நீதிபதியாகவும், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 19 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 32வது[3] தலைமை நீதிபதியானார்.[4] [5] 2002ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

19 திசம்பர் 1937 அன்று இந்தியாவின் ஒடிசா- பிதுலதா தேய் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். பட்நாயக் ஒடிசாவின் கட்டக்கில் வளர்ந்தார். பின்னர், ராவன்ஷா கல்லூரியில் படித்து பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஈவிங் கிறிஸ்த்துவக் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் ஒடிசாவிலுள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின் மதுசூதனன் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

1962ஆம் ஆண்டில், இவர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார். இவர், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். முதல் தலைமுறை வழக்கறிஞராக, இவரது வழக்கறிஞர் வாழ்க்கை மறைந்த வழக்கறிஞர் பிமல் பால், பாரிஸ்டர் பீரேந்திர மோகன் பட்நாயக் ஆகியோரின் அறைகளில் தொடங்கியது. நீதிபதி சௌரி பிரசாத் மகாபத்ரா இவரை வழக்கறிஞர் தொழில் செய்ய ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.[6]

1971 இல், அவர் ஒரிசா மாநில அரசுக்கான நிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1974இல் இவர் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில அரசு வழக்கறிஞராகவும் ஆனார். 1983இல், ஒரு நிரந்தர நீதிபதியாக ஒரிசா உயர் நீதிமன்றத்தின்]] அமர்வுக்கு உயர்த்தப்பட்டார்.[7] 1995இல், இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். 8 நவம்பர் 2002 அன்று இந்தியாவின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் இப்போது தனது மனைவி மீராவுடன் புதுடில்லியில் வசிக்கிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடுவராக செயல்படுகிறார். இவருக்கு அமர், அஞ்சன், ரிங்கு ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. P. Bhardwaj (2016). Legal Awareness and Legal Reasoning For the CLAT and LL.B. Entrance Examinations. Pearson India. pp. 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-325-7559-2.
  2. Ganesh Kumar (September 2010). Modern General Knowledge. Upkar Prakashan. pp. 142–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7482-180-5.
  3. Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. India.
  4. "Justice Pattanaik sworn-in as new CJI". Express India. 8 November 2002. http://www.expressindia.com/news/fullstory.php?newsid=16615. பார்த்த நாள்: 4 July 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. https://www.thehindu.com/thehindu/2002/11/09/stories/2002110903541300.html
  6. http://timesofindia.indiatimes.com/india/G-B-Pattanaik-takes-oath-as-Chief-Justice-of-India/articleshow/27669480.cms
  7. "Archived copy". Archived from the original on 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_வல்லப்_பட்நாயக்&oldid=3841978" இலிருந்து மீள்விக்கப்பட்டது