இந்தியத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தலைமை நீதிபதி  இந்தியா
Emblem of the Supreme Court of India.svg
இந்திய உச்ச நீதிமன்ற சின்னம்
தற்போது
எச். எல். தத்து

28 செப்டம்பர் 2014 முதல்
வாழுமிடம் புது தில்லி, இந்தியா
நியமிப்பவர் பிரணப் முக்கர்ஜி
முதல் தலைமை நீதிபதி எச்.ஜே. கனியா
உருவாக்கப்பட்ட ஆண்டு 1950
ஊதியம் மாதம் INR100000 (U)[1]
இணைய தளம் இந்திய உச்ச நீதிமன்றம்

இந்தியத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் என்பது இந்தியாவின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும். தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக எச். எல். தத்து செப்டம்பர் 28, 2014 முதல் கடமையாற்றி வருகிறார். இவர் இப்பதவியை வகிக்கும் 42ஆவது நீதிபதியாவார்.

தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.[1]

நிர்வாக முறையில் தலைமை நீதிபதியால் நிறைவேற்றப்படும் கடமைகள்.

  • வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு நீதிபதிகளை நியமிக்கும் கடமை கொண்டவர்.
  • வருகையை கண்காணிக்க வேண்டும்.
  • நீதிமன்ற அலுவலர்களை நியமிக்கவேண்டும்.
  • பொதுவான மற்றும் இதர உச்ச நீதிமன்றம் தொய்வின்றி செயல்படுவதற்கு இன்றியமையாத மேற்பார்வை சம்பந்தமான செயல்களிலும் அவர் ஈடுபடவேண்டும்.

வழக்குகளை தரம் பிரித்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப அமர்வுகளை தலைமை நீதிபதி தீர்மானிக்கின்றார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத்தின் விதி 145, 1966 ன் படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும். இந்த அதிகாரத்தின்படி இதர நீதிபதிகளின் அமர்வு மற்றும் பணிகளை நிர்ணயிக்க அவருக்கு உரிமையளிக்கின்றது.

தலைமை நீதிபதி நியமனம்[தொகு]

இந்திய அரசியலமைப்பு விதி 124 ல் குறிப்பிட்டுள்ளபடி நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நியமனம் செய்யப்படுகின்றார். அதைத்தவிர தனியான விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கென தனியான விதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதனால் நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட (பல மூத்த நீதிபதிகளினிடையே) இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.

நியமன சர்ச்சை[தொகு]

இதன் காரணமாகவே பல நேரங்களில் விதிகளுக்கு முரணாக மூத்த நீதிபதிகள் பலர் இருக்கும் தருணத்தில் அவர்களைவிட இளையவர்களான நீதிபதிகளுக்கு பணி நியமனம் செய்ய இந்திய அரசால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எ என் ராய் தனக்கு முன் உள்ள மூன்று நீதிபதிகளை பின் தள்ளும் விதமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அவசர கால பிரகடனத்துக்கு ஆதரவு அளிக்கவே இந்திரா காந்தியால் இந்த முரண்பாடான நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக இராஜ் நாராயண் (ஜனதா கட்சி) என்பவரால் விமர்சிக்கப்பட்டது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள்[தொகு]

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள், இந்நாள் தலைமை நீதிபதிகள்
எண். பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு பிறந்த மாநிலம் பதவியின் பொழுது எடுக்கப்பட்ட முடிவுகள்
01 எச்.ஜே. கனியா 15 ஆகஸ்டு 1947 16 நவம்பர் 1951 பம்பாய் (தற்பொழுதுமகாராஷ்டிரம்) ஏ கே. கோபாலன் எதிர் இந்தியப் பிரதேசம்
02 எம்.பி. சாஸ்திரி 16 நவம்பர் 1951 3 ஜனவரி 1954 மாதராஸ் (தற்பொழுது தமிழ் நாடு)
03 மேர் சந்த் மகாஜன் 3 ஜனவரி 1954 22 டிசம்பர் 1954 லாகூர்/காஷ்மீர்
04 பி.கே. முகர்ஜி 22 டிசம்பர் 1954 31 ஜனவரி 1956 மேற்கு வங்காளம்
05 சுதி ரஞ்சன் தாஸ் 31 ஜனவரி 1956 30 செப்ட்ம்பர் 1959 மேற்கு வங்காளம்
06 புவனேஷ்வர் பிரசாத் சின்கா 30 செப்டம்பர் 1959 31 ஜனவரி 1964 பீகார்
07 பி.ப்பி. கஜேந்திரகத்கர் 31 ஜனவரி 1964 15 மார்ச் 1966 பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்)
08 எ. கே. சர்க்கார் 16 மார்ச் 1966 29 ஜூன் 1966 மேற்கு வங்காளம்
09 கே. சுப்பா ராவ் 30 ஜூன் 1966 11 ஏப்ரல் 1967 மாதராஸ் (தற்பொழுது தமிழ் நாடு) கோலக் நாத் எதிர் பஞ்சாப் மாநிலம்
10 கைலாஷ் நாத் வாங்கோ 12 ஏப்ரல் 1967 24 பெப்ரவரி 1968 உத்திரப் பிரதேசம்
11 எம். இதயத்துல்லா 25 பெப்ரவரி 1968 16 டிசம்பர் 1970 தற்பொழுது சட்டீஸகர்
12 ஜெயந்திலால் சோட்டலால் ஷா 17 டிசம்பர் 1970 21 ஜனவரி 1971 தற்பொழுது குஜராத்
13 எஸ்.எம். சிக்ரி 22 ஜனவரி 1971 25 ஏப்ரல் 1973 பஞ்சாப் கேசவனந்த பாரதி எதிர் கேரள மாநிலம்
14 எ.என். ராய் 25 ஏப்ரல் 1973 28 ஜனவரி 1977 மேற்கு வங்காளம் ஜபல்பூர் எதிர் ஷிவ் கந்த் சுக்லா
15 மிர்சா அமிதுல்லா பேகம் 29 ஜனவரி 1977 21 பெப்ரவரி 1978 உத்தரப் பிரதேசம்
16 ஒய். வி. சந்திரகுட் 22 பெப்ரவரி 1978 11 ஜூலை 1985 பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்)
17 பி. என். பகவதி 12 ஜூலை 1985 20 டிசம்பர் 1986 பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்)
18 ஆர். எஸ். பதக் 21 டிசம்பர் 1986 6 June 1989 உத்திரப் பிரதேசம்
19 இ.எஸ். வெங்கட்டராமய்யா 19 ஜூன் 1989 17 டிசம்பர் 1989 மைசூர் (தற்பொழுது கர்நாடகா)
20 எஸ். முகர்ஜி 18 டிசம்பர்1989 25 செப்டம்பர் 1990 மேற்கு வங்காளம்
21 ரங்கநாத் மிஸ்ரா 25 செப்டம்பர் 1990 24 நவம்பர் 1991 ஒரிசா
22 கமல் நரேன் சிங் 25 நவம்பர் 1991 12 டிசம்பர் 1991 உத்திரப் பிரதேசம்
23 எம். எச். கானியா 13 டிசம்பர்1991 17 நவம்பர் 1992 மகாராஷ்டிரம்
24 லலித் மோகன் சர்மா 18 நவம்பர் 1992 11 பெப்ரவரி 1993 பீகார்
25 எம். என். வெங்காடாச்சலய்யா 12 பெப்ரவரி 1993 24 அக்டோபர் 1994 கர்நாடகா
26 எ. எம். அகமது 25 அக்டோபர் 1994 24 மார்ச் 1997 குஜராத்
27 ஜே.எஸ். வர்மா 25 மார்ச் 1997 18 ஜனவரி 1998 மத்தியப் பிரதேசம்
28 எம். எம். புன்சி 18 ஜனவரி 1998 9 அக்டோபர் 1998 பஞ்சாப்
29 எ. எஸ். ஆனந் 10 அக்டோபர் 1998 1 நவம்பர் 2001 ஜம்மு காஷ்மீர்
30 எஸ்.பி. பரூச்சா 2 நவம்பர் 2001 6 மே 2002 மகாராஷ்டிரம்
31 பி. என். கிர்பால் 6 மே 2002 11 நவம்பர் 2002 தில்லி
32 ஜி. பி. பட்நாயக் 11 நவம்பர் 2002 19 டிசம்பர் 2002 ஒரிசா
33 வி.என். கரே 19 டிசம்பர் 2002 2 மே 2004 உத்தரப் பிரதேசம் பெஸ்ட் பேக்கரி வழக்கு , T.M.A. பை எதிர் இந்தியப் பிரதேசம் (தனியார் கல்வி அறக்கட்டளை ஒதுக்கீடு)
34 இராஜேந்திர பாபு 2 மே 2004 1 ஜூன் 2004 கர்நாடகா
35 ஆர். சி. லகோத்தி 1 ஜூன் 2004 1 நவம்பர் 2005 உத்திரப் பிரதேசம்
36 யோகேஷ் குமார் சபர்வால் (ஒய்.கே. சபர்வால்) 1 நவம்பர் 2005 14 ஜனவரி 2007 தில்லி நில உச்சவரம்பு வழக்கு (எம்.சி. மேத்தா எதிர் இந்தியப் பிரதேசம்)
37 கே.ஜி. பாலகிருஷ்ணன் 14 ஜனவரி 2007 11 மே 2010 கேரளா பட்டியலிடப்பட்ட பிற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு வழக்கு (அசோக் குமார் தாக்கூர் எதிர் இந்தியப் பிரதேசம்)
38 எஸ்.எச்.கபாடியா 12 மே 2010 28 செப்டம்பர் 2012 பம்பாய்
39 அல்டாமஸ் கபிர் 29 செப்டம்பர் 2012 18 ஜுலை 2013 கொல்கத்தா
40 ப. சதாசிவம் 19 ஜுலை 2013 26 ஏப்ரல் 2014 தமிழ் நாடு
41 ராஜெந்திர மால் லொத்தா 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2014 ராஜஸ்தான்
42 எச். எல். தத்து 28 செப்டம்பர் 2014 (தற்பொழுது கடமையாற்றுபவர்) சத்தீசுகர்

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The High Court and Supreme Court Judges Salaries and Conditions of Service Amendment Bill 2008". PRS India.