ரஞ்சன் கோகோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு தலைமை நீதியரசர்
ரஞ்சன் கோகோய்
Ranjan Gogoi
CJI Ranjan gogoi.jpg
46வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
3 அக்டோபர் 2018 – பதவியில்
நியமித்தவர் ராம்நாத் கோவிந்த்
முன்னவர் தீபக் மிஸ்ரா
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
23 ஏப்ரல் 2012 – 2 அக்டோபர் 2018
நியமித்தவர் பிரதிபா பாட்டில்
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர்
பதவியில்
12 பெப்ரவரி 2011 – 23 ஏப்ரல் 2012
முன்னவர் முகுல் முட்கல்[1]
பின்வந்தவர் ஆதர்ஷ் குமார் கோயல் (பொறுப்பு)
தனிநபர் தகவல்
பிறப்பு 18 நவம்பர் 1954 (1954-11-18) (அகவை 64)
இந்தியா, அசாம், திப்ருகார்[2]
தேசியம் இந்தியர்
பிள்ளைகள் ரக்டிம் கோகோய் [3]

நீதியரசர் ரஞ்சன் கோகோய் (Justice Ranjan Gogoi (பிறப்பு 18 நவம்பர் 1954)[4] என்பவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாவார். இதற்கு முன்பு இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, பின்னர் உச்ச நீதிம்ன்ற நீதிபதியாக ஆனவர் ஆவார். இவரின் தந்தையான கேசவ் சந்திர கோகோய் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அசாம் மாநில முதலமைச்சராக 1982 இல் இருந்தவர் ஆவார்.

வாழ்கை[தொகு]

1954 நவம்பர் 18 அன்று அசாமின் கிழக்குப் பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் புகழ்பெற்ற குடும்பத்தில் ரஞ்சன் கோகோய் பிறந்தார். இவரது தந்தை அசாமின் முதல்வராகப் பதவிவகித்தவரான கேசவ் சந்திர கோகோய் ஆவார். திப்ருகர் நகரின் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த ரஞ்சன் கோகோய், டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றார்.[5] தனது தந்தையைப் போலவே சட்டம் பயின்ற அவர், 1978இல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்தார். 2001 பெப்ரவரி 28 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 பெப்ரவரி 12 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2011 பெப்ரவரி 12 அன்று தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2012 ஏப்ரல் 23 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு.[6][7] 2018 அக்டோபர் மூன்றாம் நாளன்று இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_கோகோய்&oldid=2720827" இருந்து மீள்விக்கப்பட்டது