இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 50 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதியாக தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் 09 நவம்பர், 2022 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

இந்திய நடுவண் நீதிமன்றம் (1937-1950)[தொகு]

நடுவண் நீதிமன்றம் (Federal Court of India) 1937 அக்டோபர் 1 இல் நிறுவப்பட்டது. இது தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடியது. இந்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும், இரண்டு கீழ்நிலை நீதிபதிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்நீதிமன்றம் 1950 சனவரி 28 இல் இந்திய உச்ச நீதிமன்றமாக மாற்றப்பட்டது.

இல. படம் பெயர் பதவிக் காலம் பதவி வகித்த நாட்கள் அமைப்பு நியமித்தவர்
1 Sir Maurice Gwyer 1940 (cropped).jpg சர் மோரிசு குவையர் 1 அக்டோபர் 1937 25 ஏப்ரல் 1943 2,032 இன்னர் டெம்பிள் (en) இரண்டாம் லின்லித்கொ பிரபு
பதில் சர் சிறினிவாசு வரதாச்சாரியார் 25 ஏப்ரல் 1943 7 சூன் 1943 43 சென்னை உயர் நீதிமன்றம்
2 சர் பட்ரிக் இசுப்பென்சு 7 சூன் 1943 14 ஆகத்து 1947 1,529 இன்னர் டெம்பிள்
3 Justice H. J. Kania.jpg சர் எச். ஜே. கானியா 14 ஆகத்து 1947 26 சனவரி 1950 896 பம்பாய் உயர் நீதிமன்றம் மவுண்ட்பேட்டன் பிரபு

‡ – பணித்துறப்பு

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்[தொகு]

இந்தியா குடியரசானதைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றம் தனது முதல் அமர்வை சனவரி 28, 1950 ஆம் ஆண்டு துவங்கியது. அது முதல் தற்போது வரை 50 பேர் இந்தியத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.[1] தற்போது, தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் 50வது இந்தியத் தலைமை நீதிபதியாக நவம்பர் 09, 2022 முதல் கடமையாற்றி வருகிறார்.[2] 16 வது உச்சநீதிமன்ற நீதிபதி ஒய்.வி சந்திர சூட் இவரின் தந்தை ஆவார்.

எண். பெயர் படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு பதவி வகித்த நாட்கள் அமைப்பு நியமித்தவர்
1 எச். ஜே. கனியா Justice H. J. Kania.jpg 26 சனவரி 1950 6 நவம்பர் 1951 ‡‡ 649 பம்பாய் உயர் நீதிமன்றம் இராசேந்திர பிரசாத்
2 ம. பதஞ்சலி சாஸ்திரி Justice M. Patanjali Sastri.jpg 7 நவம்பர் 1951 3 சனவரி 1954 788 சென்னை உயர் நீதிமன்றம்
3 மேர் சந்த் மகாஜன் Justice Mehr Chand Mahajan.jpg 4 சனவரி 1954 22 டிசம்பர் 1954 352 லாகூர் உயர் நீதிமன்றம்
4 பிஜன் குமார் முகர்ஜி Justice Bijan Kumar Mukherjea.jpg 23 டிசம்பர் 1954 31 சனவரி 1956 404 கல்கத்தா உயர் நீதிமன்றம்
5 சுதி ரஞ்சன் தாஸ் Justice Sudhi Ranjan Das.jpg 1 பிப்ரவரி 1956 30 செப்டம்பர் 1959 1,337 கல்கத்தா உயர் நீதிமன்றம்
6 புவனேஷ்வர் பிரசாத் சின்கா Justice Bhuvneshwar Prasad Sinha.jpg 1 அக்டோபர் 1959 31 சனவரி 1964 1,583 பாட்னா உயர் நீதிமன்றம்
7 பி. பி. கஜேந்திரகத்கர் Justice P.B. Gajendragadkar.jpg 1 பிப்ரவரி 1964 15 மார்ச் 1966 773 பம்பாய் உயர் நீதிமன்றம் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
8 எ. கே. சர்க்கார் Justice A.K. Sarkar.jpg 16 மார்ச் 1966 29 சூன் 1966 105 கல்கத்தா உயர் நீதிமன்றம்
9 கோகா சுப்பா ராவ் Justice K. Subba Rao.jpg 30 சூன் 1966 11 ஏப்ரல் 1967 285 ஐதராபாத்து உயர் நீதிமன்றம்
10 கைலாஷ் நாத் வாங்சோ Justice K.N. Wanchoo.jpg 12 ஏப்ரல் 1967 24 பிப்ரவரி 1968 318 அலகாபாத் உயர் நீதிமன்றம்
11 முகம்மது இதயத்துல்லா[3] Justice M. Hidayatullah.jpg 25 பிப்ரவரி 1968 16 டிசம்பர் 1970 1,025 பம்பாய் உயர் நீதிமன்றம் சாகீர் உசேன்
12 ஜெயந்திலால் சோட்டலால் ஷா Justice J.C. Shah.jpg 17 டிசம்பர் 1970 21 சனவரி 1971 35 பம்பாய் உயர் நீதிமன்றம் வி. வி. கிரி
13 சர்வ மித்ரா சிக்ரி Justice S.M. Sikri.jpg 22 சனவரி 1971 25 ஏப்ரல் 1973 824 இந்திய வழக்குரைஞர் கழகம்
14 எ. என். ரே Justice A.N. Ray.jpg 26 ஏப்ரல் 1973 27 சனவரி 1977 1,372 கல்கத்தா உயர் நீதிமன்றம்
15 மிர்சா அமிதுல்லா பேக் Justice M. Hameedullah Beg.jpg 28 சனவரி 1977 21 பிப்ரவரி 1978 389 அலகாபாத் உயர் நீதிமன்றம் பக்ருதின் அலி அகமது
16 ஒய். வி. சந்திரகுட் Justice Y.V. Chandrachud.jpg 22 பிப்ரவரி 1978 11 சூலை 1985 2,696 பம்பாய் உயர் நீதிமன்றம் நீலம் சஞ்சீவ ரெட்டி
17 பி. என். பகவதி Justice P.N. Bhagwati.jpg 12 சூலை 1985 20 டிசம்பர் 1986 526 குஜராத் உயர் நீதிமன்றம் ஜெயில் சிங்
18 ஆர். எஸ். பதக் Justice R.S. Pathak.jpg 21 டிசம்பர் 1986 18 சூன் 1989 940 அலகாபாத் உயர் நீதிமன்றம்
19 எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா Justice E.S. Venkataramiah.jpg 19 சூன் 1989 17 டிசம்பர் 1989 181 கர்நாடக உயர் நீதிமன்றம் ரா. வெங்கட்ராமன்
20 எஸ். முகர்ஜி Justice Sabyasachi Mukherjee.jpg 18 டிசம்பர் 1989 25 செப்டம்பர் 1990‡‡ 281 கல்கத்தா உயர் நீதிமன்றம்
21 ரங்கநாத் மிஸ்ரா Justice Ranganath Misra.jpg 26 செப்டம்பர் 1990 24 நவம்பர் 1991 424 ஒரிசா உயர் நீதிமன்றம்
22 கமல் நரேன் சிங் Justice K.N. Singh.jpg 25 நவம்பர் 1991 12 டிசம்பர் 1991 17 அலகாபாத் உயர் நீதிமன்றம்
23 எம். எச். கானியா Justice M.H. Kania.jpg 13 டிசம்பர் 1991 17 நவம்பர் 1992 340 பம்பாய் உயர் நீதிமன்றம்
24 லலித் மோகன் சர்மா Justice L.M. Sharma.jpg 18 நவம்பர் 1992 11 பிப்ரவரி 1993 85 பாட்னா உயர் நீதிமன்றம் சங்கர் தயாள் சர்மா
25 மணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சியா Justice M.N. Venkatachaliah.jpg 12 பிப்ரவரி 1993 24 அக்டோபர் 1994 619 கர்நாடக உயர் நீதிமன்றம்
26 எ. எம். அகமதி Justice A.M. Ahmadi.jpg 25 அக்டோபர் 1994 24 மார்ச் 1997 881 குஜராத் உயர் நீதிமன்றம்
27 ஜே. எஸ். வர்மா Justice J.S. Verma.jpg 25 மார்ச் 1997 17 சனவரி 1998 298 மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்
28 எம். எம். புன்சி Justice M.M. Punchhi.jpg 18 சனவரி 1998 9 அக்டோபர் 1998 264 பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கே. ஆர். நாராயணன்
29 எ. எஸ். ஆனந் Justice A.S. Anand.jpg 10 அக்டோபர் 1998 11 சனவரி 2001 824 ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
30 எஸ். பி. பரூச்சா Justice S.P. Bharucha.jpg 11 சனவரி 2001 6 மே 2002 480 பம்பாய் உயர் நீதிமன்றம்
31 பி. என். கிர்பால் Justice B.N. Kirpal.jpg 6 மே 2002 8 நவம்பர் 2002 186 தில்லி உயர் நீதிமன்றம்
32 கோபால் வல்லப் பட்நாயக் Justice G.B. Pattanaik.jpg 8 நவம்பர் 2002 19 டிசம்பர் 2002 41 ஒரிசா உயர் நீதிமன்றம் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
33 வி. நா. கரே Justice V.N. Khare.jpg 19 டிசம்பர் 2002 2 மே 2004 500 அலகாபாத் உயர் நீதிமன்றம்
34 எஸ். ராஜேந்திர பாபு Justice S. Rajendra Babu, Judge of the Supreme Court of India who will take over as Chief Justice of India on May 2, 2004 as the Chief Justice of India.jpg 2 மே 2004 1 சூன் 2004 30 கர்நாடக உயர் நீதிமன்றம்
35 இர. ச. லகோதி Chief Justice of India Justice Ramesh Chandra Lahoti at his swearing-in ceremony (cropped).jpg 1 சூன் 2004 1 நவம்பர் 2005 518 மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்
36 யோகேஷ் குமார் சபர்வால் Justice Y.K. Sabharwal.jpg 1 நவம்பர் 2005 13 சனவரி 2007 438 தில்லி உயர் நீதிமன்றம்
37 கொ. கோ. பாலகிருஷ்ணன் Justice K.G. Balakrishnan.jpg 13 சனவரி 2007 11 மே 2010 1,214 கேரள உயர் நீதிமன்றம்
38 எஸ். எச். கபாடியா Justice S.H. Kapadia.jpg 12 மே 2010 28 செப்டம்பர் 2012 870 பம்பாய் உயர் நீதிமன்றம் பிரதிபா பாட்டில்
39 அல்தமஸ் கபீர் Justice Altamas Kabir.jpg 29 செப்டம்பர் 2012 18 சூலை 2013 292 கல்கத்தா உயர் நீதிமன்றம் பிரணப் முகர்ஜி
40 ப. சதாசிவம் Justice Palanisamy Sathasivam.jpg 19 சூலை 2013 26 ஏப்ரல் 2014 281 சென்னை உயர் நீதிமன்றம்
41 ஆர். எம். லோதா Justice R. M. Lodha.jpg 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2014 153 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
42 எச். எல். தத்து Justice H.L. Dattu.jpg 28 செப்டம்பர் 2014 2 டிசம்பர் 2015 430 கர்நாடக உயர் நீதிமன்றம்
43 தி. சி. தாக்கூர் Justice T.S. Thakur.jpg 3 டிசம்பர் 2015 3 சனவரி 2017 397 ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
44 சகதீசு சிங் கேகர் Justice Jagdish Singh Khehar.jpg 4 சனவரி 2017 27 ஆகத்து 2017 235 பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
45 தீபக் மிசுரா Justice Dipak Misra.jpg 28 ஆகத்து 2017 02 அக்டோபர் 2018 400 ஒரிசா உயர் நீதிமன்றம் ராம் நாத் கோவிந்த்
46 ரஞ்சன் கோகோய் CJI Ranjan gogoi.jpg 03 அக்டோபர் 2018 17 நவம்பர் 2019 410 குவஹாத்தி உயர் நீதிமன்றம்
47 எஸ். ஏ. பாப்டே Justice Sharad Arvind Bobde.jpg 18 நவம்பர் 2019 23 ஏப்ரல் 2021 522 பம்பாய் உயர் நீதிமன்றம்
48 என். வி. இரமணா Justice N.V. Ramana.jpg 24 ஏப்ரல் 2021 26 ஆகஸ்டு 2022 485 ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
49 யு. யு. லலித் Justice Uday Umesh Lalit.jpg 27 ஆகஸ்டு 2022 8 நவம்பர் 2022 73 இந்திய வழக்குரைஞர் கழகம் திரௌபதி முர்மு
50 தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்[2] Justice D.Y. Chandrachud.jpg 09 நவம்பர் 2022 பதவியில் 139 பம்பாய் உயர் நீதிமன்றம்

குறிப்பு[தொகு]

  • - பதவி விலகிய நாள்
  • ‡‡ - மறைந்த நாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்". 11 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு
  3. எம். இதயத்துல்லா தற்காலிக இந்தியக் குடியரசுத் தலைவராகவும், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.