குவஹாத்தி உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குவஹாத்தி உயர் நீதிமன்றம் , இந்திய அரசுச் சட்டம், 1935 , அமல்படுத்திய பின்னர் மார்ச் 1, 1948, ல் அமைக்கப்பட்டது. இதன் மூலப் பெயர் அசாம் மற்றும் நாகாலாந்து உயர் நீதிமன்றம் ஆகும். இது 1971 வட கிழக்குப் பகுதிகளின் மறுசீரமைப்புச் சட்டப்படி, குவஹாத்தி உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் கண்டது.

இந்த நீதிமன்றம் மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட நீதிமன்றமாகச் செயல்படுகின்றது. இதன் நீதிபரிபாலனத்தின் கீழ் அடங்கும் மாநிலங்களாக அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியன உள்ளன. இந்நீதிமன்றம் குவஹாத்தியைத் தலைமையகமாகக் கொண்டு செயலாற்றுகின்றது. குவஹாத்தி அசாம் மாநிலத்தின் முன்னாள் தலைநகரமாகும்.

இதன் அமர்வுகள் கோகிமா, அயிஸ்வால் மற்றும் இம்பால் ஆகிய நகரங்களாகும்.