இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியக் குடியரசின் அமைச்சரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய ஆய மற்றும் இணை அமைச்சரவை மே, 2019[தொகு]

இந்த பட்டியல் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைச்சரவையின் பட்டியலாகும்.[1][2][3] அனைத்து அமைச்சர்களும் புது தில்லியில் உள்ள இந்திய ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின்படி அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம் பெறுபவர் இந்திய அரசியலைமைப்பில் வரையறுத்துள்ளபடி அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்கவேண்டும். அந்த விதியின்படி பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்ற கீழவை அதாவது மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமர் பொறுப்பை (2019-2024) இந்த அமைச்சரவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் பின்வரும் மூன்று வகையில் இறங்கு வரிசைகளின் படி பொறுப்பேற்கின்றனர்.

  • ஒன்றிய ஆய அமைச்சர் (cabinet-கேபினட்)- அமைச்சகத்தின் முதுநிலை (அ) மூத்த அமைச்சர். ஆய அமைச்சர் கூடுதலாக பிற அமைச்சகத்தின் அலுவல்களையும், அந்த அமைச்சகத்திற்கு அமைச்சர் நியமனம் செய்யப்படாத பட்சத்தில், மேற்கொள்வார். பிரதமர் தலைமையேற்கும் கேபினட் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்வதால் (கேபினட்) ஆய அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.
  • ஒன்றிய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)- ஆய அமைச்சர் மேற்பார்வையிடாத (அ) கண்காணிக்காத இலாக்காவை கவனிப்பர்.
  • ஒன்றிய இணை அமைச்சர்- இளநிலை அமைச்சராக ஆய அமைச்சரின் மேற்பார்வையில் (அ) கண்காணிப்பில், அமைச்சகத்தின் பொறுப்புகளை மேற்கொள்வது. உ.தா நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் என்பது அந்த அமைச்சகத்தின் வரிவிதிப்பை கண்காணிப்பது ஆகும். கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்.

அமைச்சரவை[தொகு]

மத்திய ஆய அமைச்சர்கள்[தொகு]

எண் அமைச்சகம் அமைச்சர் ஒளிப்படம் கட்சி
1 இந்தியப் பிரதமர்
பணியாளர் நலன், அணுசக்தி, விண்வெளி,
கொள்கை சார்ந்த விவகாரங்கள் துறை
நரேந்திர மோதி PM Modi Portrait(cropped).jpg பாரதிய ஜனதா கட்சி
2 உள்துறை அமைச்சர் அமித் சா Amit Shah.Jpg பாரதிய ஜனதா கட்சி
3 பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் Rajnath.jpg பாரதிய ஜனதா கட்சி
4 நிதி அமைச்சர்
பெருநிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சர்
நிர்மலா சீத்தாராமன் Nirmala Sitharaman in New Delhi - 2017 (36624276764) (cropped).jpg பாரதிய ஜனதா கட்சி
5 வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் செயசங்கர் Subrahmanyam Jaishankar 2014.jpg பாரதிய ஜனதா கட்சி
6 சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
நிதின் கட்காரி Nitin Gadkari addressing a press conference after signing of MoU between MoWR and Chief Ministers of six states viz Uttar Pradesh, Delhi, Uttarakhand, Rajasthan, Himachal Pradesh and Haryana regarding the Lakhwar Dam Project.JPG பாரதிய ஜனதா கட்சி
7 வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
ஜவுளித் துறை
பியூஷ் கோயல் Piyush Goyal (cropped).jpg பாரதிய ஜனதா கட்சி
8 மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி

The Union Minister for Textiles and Information & Broadcasting, Smt. Smriti Irani interacting with the media regarding the cabinet approval for the Integrated Scheme for Development of Silk Industry, in New Delhi (1).jpg

பாரதிய ஜனதா கட்சி
9 பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா Arjun Munda 8992.JPG பாரதிய ஜனதா கட்சி
10 சட்டம் மற்றும் நீதித்துறை கிரண் ரிஜிஜூ The Minister of State for Home Affairs, Shri Kiren Rijiju addressing the ‘India Disaster Response Summit’, in New Delhi on November 09, 2017.jpg பாரதிய ஜனதா கட்சி
11 கல்வித் துறை அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
தர்மேந்திர பிரதான் The Union Minister for Petroleum & Natural Gas, Shri Dharmendra Pradhan being greeted by the Secretary, Ministry of Petroleum & Natural Gas, Dr. M.M. Kutty, in New Delhi on May 31, 2019 (cropped).jpg பாரதிய ஜனதா கட்சி
12 விவசாயத் துறை அமைச்சகம் நரேந்திர சிங் தோமர் Narendra Singh Tomar.jpg பாரதிய ஜனதா கட்சி
13 சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வீரேந்திர குமார் காதிக் Virendra Kumar releasing the compilation of speeches, written by children of CCIs, at the closing ceremony of the weeklong festival ‘Hausla 2017’, in New Delhi.jpg பாரதிய ஜனதா கட்சி
14 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சகம்
மன்சுக் எல். மாண்டவியா Shri Mansukh L. Mandaviya takes charge as the Minister of State for Chemicals & Fertilizers, in New Delhi on July 11, 2016.jpg பாரதிய ஜனதா கட்சி
15 சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பூபேந்தர் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
16 திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோர் நலத்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே The Minister of State for Human Resource Development, Dr. Mahendra Nath Pandey addressing at the “Gun Gaurav Samman Samaroh 2017”, in New Delhi on June 13, 2017.jpg பாரதிய ஜனதா கட்சி
17 நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம்
நிலக்கரி மற்றும்
சுரங்கத்துறை அமைச்சகம்
பிரகலாத ஜோஷி Shri Pralhad Joshi Minister of Coal.jpg பாரதிய ஜனதா கட்சி
18 ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் The Minister of State for Agriculture and Farmers Welfare, Shri Gajendra Singh Shekhawat addressing a press conference, at Asansol, in West Bengal on June 03, 2018.JPG பாரதிய ஜனதா கட்சி
19 மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் நாராயண் ரானே Narayan Rane.jpg பாரதிய ஜனதா கட்சி
20 மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகம் பாரசோட்டம் ரூபாலா Parshottam Rupala addressing the inaugural session of the International Symposium on Drafting a National Policy on Medicinal and Aromatic Plants of India, in New Delhi.jpg பாரதிய ஜனதா கட்சி
21 இரயில்வே அமைச்சகம்
தகவல்த் தொடர்பு அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அசுவினி வைச்ணவ் |Shri Ashwini Vaishnaw Minister.jpg பாரதிய ஜனதா கட்சி
22 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்
ஆயுசு அமைச்சகம்
சர்பானந்த சோனாவால் Chief Minister of Assam Sarbananda Sonowal.jpg பாரதிய ஜனதா கட்சி
23 கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம்
உள்ளாட்சித் துறை அமைச்சகம்
கிரிராஜ் சிங் Giriraj Singh addressing a press conference on the achievements of the Ministry of Micro, Small & Medium Enterprises, during the last four years, in New Delhi.JPG பாரதிய ஜனதா கட்சி
24 வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சகம் ஜோதிர் சிந்தியா Jyotiraditya Scindia at the India Economic Summit 2009 cropped.jpg பாரதிய ஜனதா கட்சி
25 உருக்கு அமைச்சகம் ராம்சந்திர பிரசாத் சிங் ஐக்கிய ஜனதா தளம்
26 உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் பசுபதி குமார் பராசு லோக் ஜனசக்தி கட்சி
27 ஆற்றல்த் துறை அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ராஜ்குமார் சிங் The Minister of State (IC) for Power and New and Renewable Energy, Shri Raj Kumar Singh addressing a Curtain Raiser Press Conference regarding 2nd Global RE-invest, in New Delhi on September 25, 2018 (cropped).JPG பாரதிய ஜனதா கட்சி
28 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள்
ஹர்தீப் சிங் பூரி Hardeep Singh Puri - 2018 (45176824921) (cropped).jpg பாரதிய ஜனதா கட்சி
29 சுற்றுலாத் துறை அமைச்சகம்
வட கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி
ஜி. கிஷன் ரெட்டி G. Kishan Reddy.jpg பாரதிய ஜனதா கட்சி
30 தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம்
அனுராக் தாகூர் Anurag Thakur.jpg பாரதிய ஜனதா கட்சி
சான்றுகள்: Official Government of India publication

மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)[தொகு]

  1. சந்தோஷ் குமார் கங்க்வார் - தொழிலாளர் & வேலைவாய்ப்புத் துறை
  2. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
  3. ஸ்ரீபாத் யசோ நாயக் -யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறைகள் (AYUSH); மற்றும் பாதுகாப்புத் துறை
  4. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிரதேச மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை
  5. கிரண் ரிஜிஜு - இளைஞர் நலம் & விளையாட்டுத் துறை மற்றும் சிறுபான்மையோர் விவகாரங்கள்
  6. பிரகலாத் சிங் படேல் - பண்பாடு & சுற்றுலாத் துறை
  7. ராஜ்குமார் சிங் - மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவுத் துறை
  8. ஹர்தீப் சிங் பூரி - வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் & தொழில்கள்
  9. மன்சுக் எல். மாண்டவியா - கப்பல் துறை, வேதியல் மற்றும் உரத் துறை

மத்திய இணை அமைச்சர்[தொகு]

தனிப் பொறுப்பு அற்ற இராஜாங்க அமைச்சர்கள்:

  1. பக்கன் சிங் குலாஸ்தே - இரும்புத் துறை
  2. அஸ்வின் குமார் சௌபே - சுகாதாரம் & குடும்ப நலத் துறை
  3. அர்ஜுன் ராம் மேக்வா - நாடாளுமன்ற விவகாரம், கனரகத் தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்கள்
  4. ஜெனரல்(ஓய்வு) வி. கே. சிங் - சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை
  5. கிருஷ்ணன் பால் - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
  6. ராவ் சாகேப் தன்வே - நுகர்வோர் நலன், உணவு & பொது விநியோகம்
  7. ஜி. கிஷன் ரெட்டி - உள்துறை
  8. புருசோத்தம் ரூபாலா - வேளாண்மை & உழவர் நலம்
  9. ராம்தாஸ் அதவாலே - சமூக நீதி & உரிமையளிப்புத் துறை
  10. நிரஞ்சன் ஜோதி - ஊரக வளர்ச்சித் துறை
  11. பாபுல் சுப்ரியா - சுற்றுச்சூழல், வனம் & பருவ நிலை மாற்றம்
  12. சஞ்சீவ் குமார் பல்யான் - கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை & மீன் வளத் துறை
  13. சஞ்சய் சாம்ராவ் தோத்திரி - மனித வள மேம்பாடு, தகவல் தொடர்பு, மின்னணுவியல் & தகவல் தொழில் நுட்பத் துறை
  14. அனுராக் தாக்கூர் - நிதித் துறை & பெருநிறுவனங்களின் விவகாரங்கள் துறை
  15. சென்னபசப்பா சுரேஷ் அங்காடி - இரயில்வே துறை
  16. நித்தியானந்த ராய் - உள்துறை
  17. ரத்தன் லால் கட்டாரியா - நீர் வளம், சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை
  18. வி. முரளிதரன் - வெளியுறவுத் துறை & நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
  19. ரேணுகா சிங் சரௌதா - பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறை
  20. சோம் பிரகாஷ் - தொழில் மற்றும் வணிகம்
  21. இராமேஷ்வர் தெலி - உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை
  22. பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
  23. கைலாஷ் சௌத்திரி - வேளாண்மை & உழவர் நலம்
  24. தேவஸ்ரீ சௌத்திரி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (ஆங்கிலம்). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  3. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]