ஸ்ரீபாத் யசோ நாயக்
ஸ்ரீபாத் யசோ நாயக் | |
---|---|
இணை அமைச்சர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் | |
பதவியில் சூலை 2021 – 7 சூலை 2021 | |
முன்னையவர் | அலுவலகம் நிறுவப்பட்டது |
இணை அமைச்சர், ஆயுஷ் அமைச்சகம் | |
பதவியில் 9 நவம்பர் 2014 – 7 சூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சுபாஷ் ராம்ராவ் |
இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சுற்றுலா அமைச்சகம்[1] | |
பதவியில் 26 மே 2014 – 9 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சிரஞ்சீவி |
பின்னவர் | மகேஷ் சர்மா |
13வது,14வது,15வது,16வது மற்றும்17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | வடக்கு கோவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அத்பை, வடக்கு கோவா மாவட்டம், கோவா, போர்த்துகேய இந்தியா (தற்போது இந்தியா) | 4 அக்டோபர் 1952
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பழைய கோவா |
தொழில் | அரசியல்வாதி |
ஸ்ரீபாத் யசோ நாயக் (Shripad Yesso Naik, பிறப்பு: 04 அக்டோபர் 1952) கோவாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் தற்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகங்களின் இணை அமைச்சராக உள்ளார்.[2]
இளமைக் காலம்
[தொகு]இவர் 1952 ஆம் ஆண்டின் அக்டோபர் நான்காம் நாளில் பிறந்தார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அத்பை என்ற ஊரில் பிறந்தார். இவர் மும்பை பல்கலைக்கழகம், கோவா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1999 இல், கோவாவின் பனாஜி தொகுதியில் இருந்து, 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1999 முதல் 2004 வரை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இத்தொகுதி மறுசீரமைக்கு பின் வடக்கு கோவா தொகுதி என மாற்றம் செய்த பின்பு 2009 முதல் தற்போது வரை இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.
இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடக்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[3]
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், மே 26, 2014 முதல் நவம்பர் 09, 2014 வரை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சராகப் (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார். பின்னர் நவம்பர் 09, 2014 முதல் தற்போது வரை யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறை (AYUSH); இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், வடக்கு கோவா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் தற்போது முன்னர் வகித்த யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறையுடன், பாதுகாப்புத் துறை இணை அமைச்சராப் பொறுப்பு வகிக்கின்றார்.
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[3]
- 1994-99: கோவா சட்டமன்ற உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 30 செப்டம்பர், 2000 - 2 நவம்பர், 2001: வேளாண்துறை அமைச்சர்
- 2 நவம்பர், 2001 - 14 மே, 2002: கப்பல்துறை அமைச்சர்
- 2002-2003: வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர்
- 24 மே, 2003 - 8 செப்டம்பர், 2003: சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
- 8 செப்டம்பர், 2003 - 22 மே, 2004 : நிதித் துறை அமைச்சர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
- 27 மே, 2014 - 9 நவம்பர், 2014: பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு)
- 9 நவம்பர், 2014 முதல் - ஆயுர்வேதம், யோகா, இயன்மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய துறைகளின் அமைச்சர் (தனிப்பொறுப்பு), குடும்ப நலத் துறை அமைச்சர்
- 30 மே, 2019 முதல் - பாதுகாப்புத் துறை இணை அமைச்சர்
- மே 2021 முதல்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியா & சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா)
சான்றுகள்
[தொகு]- ↑ Shenoy, Jaideep. Union minister of state for culture and tourism (independent charge) Shripad Yeso Naik released a socio-economic survey of Karnataka's Kudubi community at the World Konkani Centre here. Naik honoured Y Ravindranath Rao, director of the survey project. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network. 2 October 2014. Retrieved 30 March 2019.
- ↑ Ministers and their Ministries of India
- ↑ 3.0 3.1 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- கோவா அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்
- 1952 பிறப்புகள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய அமைச்சர்கள்