உள்ளடக்கத்துக்குச் செல்

உருக்கு அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருக்கு அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்உத்யோக்பவன், புது தில்லி
வலைத்தளம்https://steel.gov.in/

உருக்கு அமைச்சகம் (Ministry of Steel), இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்தியாவின் உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி, விநியோகம், விலை நிர்ணயம் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா மற்றும் இணை அமைச்சர்களாக இராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே உள்ளனர். இவர்களுடன் அரசுச் செயலாளர், கூடுதல் செயலாளர், நிதி ஆலோசகர், 4 கூட்டுச்செயலாளர்கள் மற்றும் தலைமை கணக்காளரும் இவ்வமைச்சகத்தின் முக்கிய அங்கத்தவர்களாவார்கள்.

துணை அமைப்புகள்

[தொகு]

அமைச்சகத்தின் ஆய்வுகளுக்கும், தகவல்களுக்கும், தொழிற்நுட்பத்திற்கும் மூன்று உதவி துணை அமைப்புகள் உள்ளன.

பணிகள்

[தொகு]
  • மறுசுழல் ஆலைகள், கலப்பு-உருக்கு மற்றும் ஃபெரோ கலப்பாலைகள் உட்பட இரும்பு மற்றும் உருக்கு தனியார் மற்றும் பொதுத்துறை தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு திட்டமும் ஒருங்கிணைப்பும் வழங்குதல்
  • இரும்பு, உருக்கு, ஃபெரோ கலப்புலோகங்கள் மற்றும் வெப்பம்தாங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த திட்டங்களிடல்.
  • இரும்பாலைகளுக்குத் தேவையான இரும்பு தாது, மாங்கனீசு தாது, குரோமிய தாது மற்றும் வெப்பம்தாங்கிகள் போன்ற உப தொழில்களையும் மேம்படுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]