சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
Emblem of India.svg
துறை மேலோட்டம்
அமைப்பு29 சனவரி 2006
ஆட்சி எல்லைஇந்தியாஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்http://www.minorityaffairs.gov.in/


சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) அல்லது சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் (Ministry of Minority Affairs), இந்திய அரசால் 2006 ஆம் ஆண்டின் ஜனவரி 29 அன்று ஏற்படுத்தப்பட்ட அமைச்சகம் ஆகும். இந்த அமைச்சகமே சிறுபான்மை மக்களின் நலன்களை காக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்திய சிறுபான்மையினருள் இசுலாமியர், சீக்கியர், கிறித்தவர், பௌத்தர், பார்சி மற்றும் சமணர் ஆகியோரும் அடக்கம்[1]

முன்னாள் அமைச்சர்கள்[தொகு]

எண் புகைப்படம் பெயர் பணி காலம் பிரதமர் அரசியல் கட்சி
1 ஏ. ஆர். அந்துலே 29 ஜனவரி 2006 22 மே 2009 மன்மோகன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2 Salman Khurshid portrait (cropped).jpg சல்மான் குர்சித் 22 மே 2009 28 அக்டோபர் 2012
3 K Rahman Khan (cropped).jpg கா. ரஹ்மான்கான் 28 அக்டோபர் 2012 26 மே 2014
4 The Union Minister for Minority Affairs, Dr. Najma A. Heptulla addressing at the inauguration of an exhibition, in New Delhi on March 19, 2016.jpg நஜ்மா ஹெப்துல்லா 26 மே 2014 12 ஜூலை 2016 நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சி
5 Mukhtar Abbas Naqvi.JPG முக்தர் அப்பாஸ் நக்வி 12 ஜூலை 2016 6 ஜூலை 2022
6 Smriti Irani - 2019.jpg இசுமிருதி இரானி(கூடுதல் பொறுப்பு) 06 ஜூலை 2022 பதவியில்

நிறுவனங்கள்[தொகு]

  • சுயநிதி அமைப்பு
    • மௌலான ஆசாத் அறக்கட்டளை [3]
  • பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
    • தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)

திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள்[தொகு]

  • ஜியோ பார்சி - பார்சிகளின் மக்கள் தொகைக் குறைவைக் கட்டுப்படுத்தும் திட்டம் [4]
  • நய் ரோஷினி - சிறுபான்மை சமூக பெண்களின் தலைமைத்துவம் மேம்பாடு திட்டம் [5]
  • நய் மன்சில் - சிறுபான்மை சமூகங்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார திட்டம்[6]
  • நய் உடான் - சிறுபான்மை சமூகங்களின் மாணவர்கள் முதல்நிலை போட்டி தேர்விகளில் வெற்றிப்பெறுவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டம் [7]
  • சீக்கோ அவ்ர் கமோவ் - சிறுபான்மையினரின் திறன் மேம்பாட்டுக்கான திட்டம்[8]
  • ஹமரி தரோஹார் - இந்திய கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த கருத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டம்[9]
  • ப்ரி மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களைல் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்[10]
  • போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களில் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டம்[11]
  • சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவித்தொகை திட்டம்[12]
  • சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டம் [13]
  • படோ பர்தேஷ் - சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டம்[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ministry Of Minority Affairs" (PDF). 2010-09-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://nclm.nic.in/ பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம் Commissioner for Linguistic Minorities(CLM)]
  3. (MAEF)
  4. "Jiyo Parsi - Scheme for containing population decline of Parsis", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  5. "Nai Roshni - Scheme for Leadership Development of Minority Women", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  6. "Nai Manzil - An Integrated Education and Livelihood Initiative for the Minority Communities", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  7. "Nai Udaan - Support for minority students clearing prelims exam conducted by UPSC, State PSC and SSC", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  8. "Seekho aur Kamao (Learn & Earn) - Scheme for Skill Development of Minorities", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  9. "Hamari Dharohar - A scheme to preserve the rich heritage of Minority Communities of India under the overall concept of Indian culture", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  10. "Pre-Matric Scholarship Scheme", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  11. "Post-Matric Scholarship Scheme", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  12. "Merit-cum-Means Scholarship Scheme", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  13. "Maulana Azad National Fellowship for Minority Students", Minorityaffairs.gov.in, 25 December 2018 அன்று பார்க்கப்பட்டது
  14. "Padho Pardesh- Ministry of Minority Affairs, Government of india". Ministry of Minority Affairs. 28 May 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]