இந்திய மாவட்ட நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாவட்ட நீதிமன்றங்கள்- மாவட்ட நீதிபதியின் தலைமையில் இயங்கும் நீதிமன்றங்களாகும். இந்திய மாவட்ட அளவில் நீதிபரிபாலணங்களை புரிகின்றன. இந்திய மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மேலாண்மையில் இயங்குபவைகளாகும்.

மாவட்ட நீதிமன்றங்களின் கட்டமைப்பு[தொகு]

மாவட்ட நீதிமன்றங்களின் அதிக அதிகாரம் வாய்ந்த நீதிமன்றங்களாக மாவட்டம் மற்றும் தொடர் விசாரணை (செசன்சு-குற்றவியல் தொடர் உசாவல்) நீதிமன்றங்கள் விளங்குகின்றன. இது முதன்மை உரிமை இயல் (சமூக நலன்-சிவில்) நீதிமன்றங்களாகும். இதில் வழக்காடற்குறிய (முறை மன்ற விசாரணை (அ) சோதிக்கக்கூடிய வழக்குகள்-டிரையல்) வழக்குகள் நடைபெறுகின்றன. இவைகள் குற்றங்களுக்கு தண்டணை அளிக்கக்கூடிய மற்றும் உச்ச பட்சத் தண்டணையளிக்கும் (கேப்பிட்டல் பனிஷ்மென்ட்) அதிகாரங்களைக் கொண்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்கள்[தொகு]

மாவட்ட நீதிமன்றங்கள்[1]

மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் நீதிமன்றம், இணை மாவட்ட நீதிமன்றம், உதவி மாவட்ட நீதிமன்றம், சிறு வழக்குகள் நீதிமன்றம் (ஸ்மால் காசஸ் கோர்ட்), முதன்மை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (பர்ஸ்ட் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட் கோர்ட்), கூடுதல் முதன்மை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிமன்றம்.

(குறிப்பு- முதன்மை, இரண்டாம், மூன்றாம் படிநிலைகளில் நீதிமன்றங்கள் அந்தந்த மாவட்டங்களின் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் செய்ல்படும்)

மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள்[தொகு]

மாவட்ட நீதிபதி[2]

என்ற சொல் ஒர் உரிமை இயல் நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, இணை மாவட்ட நீதிபதி, உதவி மாவட்ட நீதிபதியையும், சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியையும், முதன்மைப் பெருநகரக் குற்றவியல் நடுவரையும், கூடுதல் முதன்மை பெருநகரக் குற்றவியல் நடுவரையும், அமர்வு நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி மற்றும் உதவி அமர்வு நீதிபதிகளையும் குறிக்கும்.

மாவட்ட நீதிபதியின் நியமனம்[தொகு]

மாவட்ட நீதிபதி நியமனம்[2]

ஒரு மாநிலத்தின் மாவட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, நியமனம் செய்வது, பதவி உயர் செய்யப்படுவது போன்ற விவகாரங்கள் அந்த மாநில ஆளுநரால் (மாநில அரசு பரிந்துறைகளின் பேரில்) உயர் நீதிமன்றத்தை கலந்தாலோசித்து நியமனம் செய்யப் படுகின்றனர்.

தகுதிகள்

மாவட்ட நீதிபதியாவதற்கு தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளவை- ஒரு நபர் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியாதிருக்க வேண்டும், 7 ஆண்டுகளுக்கு குறையாமால் வழக்குரைஞராக பணிப் புரிந்திருக்க வேண்டும். மற்றும் அத்தகைய நியமனத்திற்கு உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப் பட்டிருக்கவேண்டும்.

மாவட்டத் துணை நீதிமன்றங்கள்[தொகு]

மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிமன்றங்களுக்கு உதவியாக மாவட்டத் துணை (சார்) நீதிமன்றங்கள் செயல் படுகின்றன.

மூன்றடுக்கு அமைப்பில் செயல்படுகின்றன.

கீழ்நிலை நீதிமன்றங்கள்[தொகு]

உரிமை இயல் (சமூக நலன்-சிவில்) பிரிவில் (கீழ்நிலை) நீதிபதியாக உரிமை இயல் நீதிபதியின் கணைகாணிப்பிலும், குற்றவியல் பிரிவில் கீழ் நீதிமன்ற நீதிபரிபாலணை நடுவரின் (மாஜிஸ்ட்ரேட்) கண்காணிப்பிலும் செயல்படுகின்றன.

 • முதல் அடுக்கு (கீழ் நிலை நீதிமன்றங்கள்)
  • உரிமை இயல் நீதிபதி (கீழ் நிலை)- சமூக நலன் சிறு பணக்கூறு (அ) பணவிடை வழக்குகளைக் கையாள்கின்றார்.
  • குற்றவியல் நீதிபரிபாலணை நடுவர் -(கீழ் நிலை)- தண்டணைக்குறிய மற்றும் 5 வருடம் சிறைத் தண்டணையளிக்கக் கூடிய வழக்குகளைக் கையாள்கின்றார்.

மேல் நிலை நீதிமன்றங்கள்[தொகு]

உரிமை இயல் பிரிவில் (மேல் நிலை) நீதிபதியாக உரிமை இயல்(சமூக நலன்-சிவில்) நீதிபதியின் கண்காணிப்பிலும், குற்றவியல் பிரிவில் மேல் நீதிமன்ற நீதிபரிபாலணை நடுவரின் (மாஜிஸ்ட்ரேட்) கண்காணிப்பிலும் செயல்படுகின்றன.

 • 1.இடை அடுக்கு- (மேல்நிலை நீதிமன்றங்கள்)
  • உரிமை இயல் நீதிபதி (மேல்நிலை)-மேல்நிலை நிதமன்றங்களில் சமூக நலன் வழக்குகளை கையாள்பவர்.
  • குற்றவியல் நடுவர் (மேல்நிலை )- மேல்நிலை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்பவர்.
 • 2.மூன்றாம் அடுக்கு மாவட்டக் கூடுதல் நீதிமன்றங்கள் (அடிசனல் கோர்ட்)
  • முதன்மை உரிமை இயல் கூடுதல் நீதிபதி (மேல்நிலை) - சமூக நலன் வழக்குகளை கையாள்கின்றார்.
  • தலைமை நீதிபரிபாலணை குற்றவியல் நடுவர் (மேல் நிலை)- தண்டணைக்குரியக் குற்றங்கள், 7 வருடம் சிறை வழங்கக்கூடிய வழக்குகளைக் கையாள்கின்றார்.

மாவட்ட நீதிபரிபாலணை[தொகு]

மாவட்ட நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபரிபாலணைநில் தன்னாட்சிப் பெற்று இயங்கிகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டச் சட்ட சங்கங்களை நிறுவி அதன் பலனாக நியாயமான, பாரபட்சமற்ற அச்சமின்றி நீதிபரிபாலணை புரிகின்றன.

பின்னடைவு[தொகு]

மாவட்ட நிதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளினாலும், காலந்தாழ்ந்த (நீதி) நீதிபரிபாலணையாலும் , நீதிபரிபாலணையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனப் புத்தகம். இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி பப்லிகேசன். பக். 1-467. http://tamilelibrary.org/teli/bkpubls.html. 
 2. 2.0 2.1 நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனப் புத்தகம். இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி ப்பலிகேசன். பக். 1-467. http://tamilelibrary.org/teli/bkpubls.html.