இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Emblem of India.svg

இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:
இந்திய அரசியலமைப்பு

Constitution of India.jpg
முகப்புரை


மற்ற நாடுகள் ·  சட்டம் நுழைவு

இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 

அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது. இந்திய அரசியலமைப்பின் சட்டவிதி 12 முதல் 35 வரை ஆறுவகை உரிமைகள் குறித்து விவரிக்கும் அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி, உரிமைகளுக்கான, இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுகிறது. 

ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன. 

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

ஆறு அடிப்படை உரிமைகளாவன[1]

  1. சம உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை
  4. சமய சார்பு உரிமை
  5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
  6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை

மேற்கோள்கள்[தொகு]