இந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Emblem of India.svg

இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:
இந்திய அரசியலமைப்பு

Constitution of India.jpg
முகப்புரை


மற்ற நாடுகள் ·  சட்டம் நுழைவு

இந்தியாவானாது மத்திய அரசு அளவில் கூட்டாட்சியையும், அவற்றின் மாநிலங்கள் அளவில் ஒற்றையாட்சியையும் கொண்டுள்ளது. இதனை செவ்வனே செய்ய இந்திய அரசியலமைப்பு அதிகாரங்களை கீழ்கண்ட பட்டியல்கள் வழியாக வழங்குகின்றன.இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே ஆகும்.பின்னர், 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல்-1[தொகு]

இந்திய ஒன்றியத்தில் அடங்கியுள்ள மாநிலங்களையும், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதற்பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 8 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும்(ஒன்றியப் பகுதிகள்), ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன. காெசிக்

பட்டியல்-2[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல்-3[தொகு]

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல்-4[தொகு]

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்கும் மாநிலங்களவையில் உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது.

பட்டியல்-5[தொகு]

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. நாடாளுமன்றத்தில் எளிதான அதிக வாக்குகள் மூலம், இப்பட்டியல்களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல்-6[தொகு]

அசாம், திரிபுரா மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேலாண்மைப் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான அதிக வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல்-7[தொகு]

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மேலும், மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய(1) மத்திய அரசின் பட்டியல்[தொகு]

இது ஒன்றிய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஒன்றியப் பட்டியலில் மொத்தம் 100 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது ஒன்றிய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 100 துறைகள்(ஆரம்பத்தில் 97 துறைகள்) ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(2)மாநிலப்பட்டியல்[தொகு]

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வி, விளையாட்டு, வனவியல், வனவிலங்கு பாதுகாப்பு, எடைகள் (ம) அளவீடுகள், நீதி நிர்வாகம் ஆகிய 5 இம் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 61 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. வேளாண்மை வருமான வரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 61 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள் ஆகும்.

(3)பொதுப்பட்டியல்[தொகு]

இது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன.இவற்றில் கல்வி, வனவியல், வனவிலங்கு பாதுகாப்பு, எடைகள் (ம) அளவீடுகள், நீதி நிர்வாகம் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 52. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 52 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல்-8[தொகு]

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும்.இதில் 2003-ம் ஆண்டு, 19வதாக மைதிலியும், 20வதாக போடோவும், 21வதாக சாந்தலியும், 22வதாக டோக்ரியும் இணைக்கப் பட்டன.

 1. தமிழ் -
 2. வங்களாம் -
 3. குசராத்தியம் -
 4. இந்தி -
 5. கன்னடம் -
 6. கசுமீரியம் -
 7. கொங்கணியம் -
 8. மலையாளம் -
 9. மணிப்புரியம் -
 10. மராத்தி -
 11. நேபாளி -
 12. ஒரியம் -
 13. பஞ்சாபி -
 14. சமசுகிருதம் -
 15. சிந்தியம் -
 16. அசாமியம் -
 17. தெலுங்கு -
 18. உருது -
 19. மைதிலியம் -
 20. போடோயம் -
 21. சாந்தளியம் -
 22. தோக்ரியம் -

பட்டியல்-9[தொகு]

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது, ஒன்பதாவது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக்கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் சமீன்தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல்-10[தொகு]

கட்சித்தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல்-11[தொகு]

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல்-12[தொகு]

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன. எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

மேற்கோள்கள்[தொகு]