இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emblem of India.svg

இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:
இந்திய அரசியலமைப்பு

Constitution of India.jpg
முகப்புரை


மற்ற நாடுகள் ·  சட்டம் நுழைவு

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையுள்ள கல்வெட்டு

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் பகுதி அல்ல, நீதிமன்ற சட்டத்தையும் வலியுறுத்துவதில்லை.

இருப்பினும் கேசவனந்தா பாரதி எதிர் கேரளா மாநிலம் வழக்கில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அங்கீகரிக்கப்பட்டது மற்றும் இது இருவேறு மாறுப்பட்டப் பொருள் கொண்ட இடங்களில் முகப்புரையைப் பயன்படுத்தலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் முகப்புரை இருவேறு பொருள் கொண்ட இடங்களில் பொருள் விளக்கும் தரும் கருவியாக இந்திய அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டது.

உதாரணம்

மிக முக்கியமான முகப்புரைக்கு உதாரணமாக சமயச் சார்பற்ற அ மதச் சார்பற்ற (செக்கியூலர்) மற்றும் பொதுவுடைமை அ சமதர்மம் (சோசலிஸ்ட்) இவையிரண்டும் முகப்புரையாக கருதப்படுகின்றது. மூல எழுத்துரையில் இவ்வார்த்தைகள் மன்னராட்சியற்ற அல்லது முடியாட்சியற்ற மக்களாட்சிக் குடியரசு (சாவரின் டெமாக்கரக்டிக் ரிபப்ளிக்) என்று எழுதப்பட்டுள்ளது.

இவ்விரண்டு சர்ச்சைக்குரிய கூடுதல் வார்த்தைகள் பொதுவுடமை (சோசலிஸ்ட்) மற்றும் மதசார்பற்ற (செக்கியூலர்) 42 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. இத்திருத்தம் 1976 ல் திருமதி இந்திரா காந்தியின் வலியுறுத்தலால், அவர் ஆட்சியில் இருந்தமையால் புகுத்தப்பட்டது.


முகப்புரை[தொகு]


நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, கட்டமைக்கின்றோம் இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியாட்சியாக மற்றும் நிர்ணயிக்கிறோம் இதன் எல்லா குடிமக்களுக்கும்

  • சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;
  • எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;
  • படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம்; மற்றும்

ஊக்குவிக்கின்றோம் அனைவரிடத்திலும்
சகோதரத்துவ மனப்பான்மையை, தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த.

இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.