மணிப்புரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்புரியம்
Meetei Mayek
எழுத்து முறை வகை
பிராந்தியம்மணிப்பூர்
மொழிகள்மணிப்புரியம்
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Mtei (337), ​Meitei Mayek (Meithei, Meetei)
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Meetei Mayek
U+ABC0–U+ABFF
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
இந்தியாவில் பேசும்பகுதி
(வெளிர் சிவப்பு நிறம்)

மணிப்புரியம் (Manipuri, মণিপুরি) அல்லது மேதி மொழி (Meitei-lon, মৈতৈলোন্, Meitei-lol, মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக (பட்டியல்-8) இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.

1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது.

மொழியின் தன்மைகள்[தொகு]

  • இது பிராமிய மொழிக்குடும்பத்திலுள்ள அபுகிடா எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.
  • இம்மொழியில் 15 மெய்யெழுத்துகளே உள்ளன. மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.[1]
  • 1891-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.

மணிப்புரிய எண்களின் ஒலிப்பு[தொகு]

1 - அம, 2 - அனி, 3 - அகும், 4 - மரி, 5 - மேன்க, 6 - தருக், 7 -தரட், 8 -நிய்பன், 9 - மபன், 10 -ட்டர

மேற்கோள்கள்[தொகு]

  1. A Manipuri Grammar, Vocabulary, and Phrase Book - 1888 Assam Secretariat Press

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மணிப்புரியம்ப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புரியம்&oldid=3794002" இலிருந்து மீள்விக்கப்பட்டது