மொய்ராங்

ஆள்கூறுகள்: 24°30′N 93°46′E / 24.5°N 93.77°E / 24.5; 93.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொய்ராங்
கேக் மொய்ராங்
சிறிய நகரம்
மொய்ராங் is located in மணிப்பூர்
மொய்ராங்
மொய்ராங்
மொய்ராங் is located in இந்தியா
மொய்ராங்
மொய்ராங்
ஆள்கூறுகள்: 24°30′N 93°46′E / 24.5°N 93.77°E / 24.5; 93.77
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்பிஷ்ணுபூர்
ஏற்றம்766 m (2,513 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்16,684
மொழிகள்
 • அலுவல்மணிப்புரியம் (மணிப்புரி)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMN
இணையதளம்manipur.gov.in

மொய்ராங் (Moirang) என்பது இந்திய மாநிலமான மணிப்பூரிலுள்ள ஒரு சிறிய நகரமாகும். இது மாநில தலைநகர் இம்பாலுக்கு தெற்கே சுமார் 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 269 கி.மீ ஆகும். 67 கிராமங்கள் அடங்கிய இந்நகரத்தில் 62,187 என்ற அளவில் மக்கள் தொகை இருக்கிறது. .

வடகிழக்கு இந்திய பிராந்தியத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரியும், கெய்புல் லாம்சோ தேசிய பூங்காவும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்த தொகுதியில் 12 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

வரலாறு[தொகு]

கம்பா தோய்பி[தொகு]

வரலாற்று ரீதியாக, இந்நகரம் தெய்வத்தின் பழங்கால கோவிலான தங்ஜிங் பிரபுவிற்கும்கம்பா தோய்பியின் புகழ்பெற்ற காதல் கதைக்கும் பிரபலமானது. ஞான்கலேகை என்ற கிராமப் பெயரில், கம்பாவும் நோங்பானும் பயன்படுத்திய பழைய துணி இன்னும் பாதுகாக்கப்படுகின்றன.

பண்டைய காலங்களில், மணிப்பூரின் ஏழு குல மன்னர்களில் மொய்ராங் மன்னர் மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்பட்டார். கம்பா-தோய்பி சகாப்தத்தின் இறுதி வரை மியான்மர் மன்னர் வருடாந்திர போர் இழப்பீட்டு பணத்தை மொய்ராங் மன்னருக்கு செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரும் இந்திய தேசிய இராணுவமும்[தொகு]

இங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், 1943 டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் ஜிம்கானா சங்கத்தில் வளாகத்தில் இந்திய சுதந்திரத்தின் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது, மொய்ராங் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐ.என்.ஏ) தலைமையகமாக இருந்தது. கர்னல் சவுகத் மாலிக் மொய்ராங்கில் மைரேம்பம் கொயெரெங் சிங் போன்ற மணிப்பூரிகளின் உதவியுடனும், இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களாக இருந்த மற்றவர்களின் உதவியுடன் இந்திய தேசிய இராணுவத்தின் இந்திய தேசியக் கொடியை 1944 ஏப்ரல் 14, அன்று இரண்டாவது முறையாக பறக்கவிட்டார். மொய்ராங்கில் உள்ள இந்திய தேசிய இராணுவ அருங்காட்சியகம் சில போர்க்கால நினைவுச்சின்னத்தையும் கொண்டுள்ளது.

மக்கள்[தொகு]

மணிப்பூரின் முதல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மைரேம்பம் கொயெரெங் சிங் இந்த ஊரைச் சேர்ந்தவராவார். இவர் மூன்று முறை மணிப்பூர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலாச்சாரம்[தொகு]

மே மாதத்தின் நடுப்பகுதி முதல் சூன் வரை நடைபெறும் நீண்ட இலாய் அரோபா திருவிழாவும், அழகிய கம்பா தோய்பி நடனமும் இங்கே தோன்றியது.

நிலவியல்[தொகு]

மொய்ராங் 24.5 ° வடக்கிலும் 93.77 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [1] இதன் சராசரி உயரம் 766 மீட்டர் (2513 அடி) ஆகும்

சுற்றுலா இடங்கள்[தொகு]

  • இபுதோ தங்ஜிங் கோயில் : மொய்ராங்கின் ஒரு பழங்கால கோயிலான, இது தங்ஜிங் பிரபுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இலாய் அரோபா திருவிழா என்பது இங்கு மிகப் பெரிய அளாவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்திய தேசிய இராணுவ வளாகம்: இன்று மொய்ராங் ஒரு பண்டைய அதிகாரமாக இருந்ததைத் தவிர, இந்தியாவின் அரசியல் வரலாற்றையும் கொண்டுள்ளது. ஏப்ரல் 14, 1944 அன்று, இந்திய தேசிய இராணுவத்தின் கொடி இரண்டாவது முறையாக மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள இந்திய மண்ணான மொய்ராங்கில் ஏற்றப்பட்டது (இந்திய சுதந்திரத்திற்கான மூவர்ணக் கொடியை இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை தளபதியும், இந்திய தேசிய அரசாங்கத்தின் தலைவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், போர்ட் பிளேர்- சாகித் சுயராஜ்ஜிய தீவில் 1943 திசம்பர் 30 அன்று தானே ஏற்றினார்). மொய்ராங்கில் உள்ள இந்திய தேசிய இராணுவ அருங்காட்சியகம், இந்திய தாய்நாட்டை விடுவிப்பதற்காக பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்களின் புதையல் ஆகும்.
  • லோக்டாக் ஏரி : மணிப்பூரின் புகழ்பெற்ற லோக்தாக் ஏரி முழு வடகிழக்கிலும் மிகப்பெரிய நன்னீர் ஏரி என்று கூறப்படுகிறது. ஏரி, அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் சமூகங்களின் பொருளாதாரத்தில் ஒரு உள்ளார்ந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதன் இயற்கை விளைபொருளான மீனையும், பிற வகை காய்கறிகளையும் ஏரியைச் சுற்றியுள்ள பசுமையிலிருந்து பெறுகிறது.
  • செந்திரா தீவு: செந்திரா, எல்லா பக்கங்களிலும் ஏரி-நீரால் சிக்கியுள்ள ஒரு சிறிய குன்றானது பிரதான பாதையுடன் ஒரு பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் ஒரு சுற்றுலா-விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடியது.
  • கெய்புல் லாம்சோ தேசிய பூங்கா : உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா, லோக்டாக் ஏரியில், மணிப்பூரின் நடன மான் என்ற சங்காய் மானின் கடைசி இயற்கை வாழ்விடமாகும். இந்த தனித்துவமான ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பில் மான்களின் பார்வை எந்தவொரு வனவிலங்கு ஆர்வலருக்கும் அவசியம். ஒரு சிலவற்றைக் குறிப்பிட வேண்டிய பிற வனவிலங்குகள்: ஹாக் மான், நீர்நாய் மற்றும் ஏராளமான நீர்க் கோழிகள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளையும் நவம்பர் முதல் மார்ச் வரை காணலாம். மணிப்பூர் வனத்துறை பூங்காவிற்குள் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் இரண்டு ஓய்வு இல்லங்களை பராமரிக்கிறது.
  • புபாலா : இது மொய்ராங்கிற்கும், லோக்தாக் ஏரிக்கும் நெருங்கிய உறவைக் கொண்ட மற்றொரு இடமாகும். அந்த இடம் அமைந்துள்ள கரையில். புபாலாவில் படகு சவாரியும், பிற நீர் விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கம்பா - தோய்பி கதையின் போக்குக்குள் பயங்கர நகைச்சுவையுடன் கூடிய ஒரு அத்தியாயம் புபாலா அனுபாவின் (புபாலாவின் வயதானவர்) கதை.

போக்குவரத்தும் தகவல் தொடர்பும்[தொகு]

மொய்ராங் தேசிய நெடுஞ்சாலை எண் -150 மூலம் இம்பால் மற்றும் சுராச்சந்த்பூரால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மொய்ராங்-கும்பி மற்றும் மொய்ராங்-தங்கா ஆகியவை மொய்ராங் நகரத்துடன் இணைக்கப்பட்ட மற்ற முக்கியமான மாவட்ட சாலைகள் ஆகும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] மொய்ராங்கின் மக்கள் தொகை 16,684 ஆகும். ஆண்களில் 51% பேரும், பெண்கள் 49% என்ற அளவில் உள்ளது. இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 71 சதவீதமும், பெண் கல்வியறிவு 55 சதவீதமுமாகும். இதன், 13% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

அரசியல்[தொகு]

இந்நகரம் உள் மணிப்பூரின் (மக்களவைத் தொகுதி) ஒரு பகுதியாகும்.

உசாத்துணை[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Moirang
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்ராங்&oldid=3035810" இருந்து மீள்விக்கப்பட்டது