குடகு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடகு
கொடவா தாக்கா (ಕೊಡವ ತಕ್‌)
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கர்நாடகம் - குடகு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
500,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3


குடகு மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள குடகு மாவட்டத்தில் வாழும் கொடவர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 500,000 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியில் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் செல்வாக்குப் பெருமளவில் உண்டு. இதிலுள்ள பல சொற்கள், தென் கன்னடத்தின் கிளைமொழியான பேரி பாஷேக்கும் (Beary bashe), இதற்கும் பொதுவாக உள்ளன.

மொழியியல் அடைப்படையில் இம்மொழி திராவிட மொழிகளிலிருந்து சிறிதளவு வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. பொதுவாகத் திராவிட மொழிகள் ஐந்து குறில் உயிர்களையும், ஐந்து நெடில் உயிர்களையும் கொண்டிருக்க, குடகு மொழியில் மேலும் இரண்டு உயிரொலிகள் உண்டு. இவை உயர் மைய இதழ்குவியா ஒலியான /ï/, நடு மைய இதழ்குவியா ஒலியான /ë/ என்பனவாகும். இவையும் குறில், நெடில் என வேறுபடுத்தப்படுகின்றன.

இவ்வேறுபாடுகளால் இம்மொழி பல மொழியியலாளர்களைக் கவர்ந்தது எனினும் இது தனி மொழியாகக் கணிக்கப்படவில்லை. முன்னர் இது துளு மொழியுடன், அல்லது தமிழ், மலையாளம் மொழிகளுடன் நெருக்கமான, கன்னடத்தின் ஒரு கிளை மொழியாகவே கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இது திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தனியான மொழியாக அடையாளம் காணப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகு_மொழி&oldid=1814528" இருந்து மீள்விக்கப்பட்டது