உள்ளடக்கத்துக்குச் செல்

காசி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


காசி மொழி
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்மேகாலயா
அசாம்
இனம்காசி இன மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.6 மில்லியன்  (2001)[1]
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
  • காசி
    • காசி மொழி
பேச்சு வழக்கு
போய் காசி
நோங்லங்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மேகாலயா, இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kha
ISO 639-3kha
மொழிக் குறிப்புkhas1269[2]

காசி மொழி (Khasi language) இந்தியாவின் மேகாலயா மாநில அலுவல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழியில் இந்தோ-ஆரிய மொழிகளிலான வங்காள மொழி மற்றும் இந்தி மொழிகளின் பல சொற்கள் கலந்து பேசப்படுகிறது.[3].

பேசப்படும் பகுதிகள்[தொகு]

காசி மொழி இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் காசி எனும் பழங்குடி இன மக்களால் பேசப்படுகிறது. மேலும் அசாம் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களிலும், வங்காளதேசத்தின் வடகிழக்குப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. எழுத்து வடிவம் கொண்ட இம்மொழி 1.6 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

யுனேஸ்கோ நிறுவனம் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாக காசி மொழியை 2012-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. காசி மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "காசி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Khāsi language
  4. "The Khasi language is no longer in danger". United Nations Educational, Scientific and Cultural Organization. 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_மொழி&oldid=2191636" இலிருந்து மீள்விக்கப்பட்டது