குறுக்ஸ் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்ஸ் மொழி
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்பீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம், வங்காளதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,053,000 (1997)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kru
ISO 639-3kru

குடக்கு மொழி அல்லது குடுக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிழான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீகார், சார்க்கண்டு, ஒடிசா, சத்தீசுகர், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். வங்காளதேசத்தில் புழங்கும், ஒரே உள்நாட்டுத் திராவிட மொழி இதுவேயாகும். இதனைப் பேசுவோரில் குரூக் மக்கள் மற்ரும் ஓரோன் மக்கள் 1,834,000 பேரும், கிசான் இனக்குழுவினர் 219,000 பேரும் ஆவர். இது, பல வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.

இதனைப் பேசுவோர் தொகை இரண்டு மில்லியனுக்கு மேல் இருப்பினும், இது அழியும் ஆபத்தில் உள்ள ஒரு மொழியாகக் கணிக்கப்படுகிறது.[1] தற்போது தொலங் சீக்கி[2] எழுத்துமுறை நாராயண ஒரியன் என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.[3]

எழுத்து முறை[தொகு]

𑰀 𑰁 𑰂 𑰃 𑰄 𑰅

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Daniel Nettle and Suzanne Romaine. Vanishing Voices: The Extinction of the World's Languages. Oxford: Oxford University Press, 2000. Page 9.
  2. Anshuman Pandey. "Preliminary Proposal to Encode the Tolong Siki Script in the UCS".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-09-29 அன்று பார்க்கப்பட்டது.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்ஸ்_மொழி&oldid=3550918" இருந்து மீள்விக்கப்பட்டது