சத்தீசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
—  சத்தீஸ்கர் மாநிலம்  —
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
இந்தியாவில் சத்தீசுக்கரின் அமைவிடம்
அமைவிடம் 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60ஆள்கூற்று: 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60
மாவட்டங்கள் 18
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 2000
தலைநகரம் ராய்ப்பூர், சத்தீஸ்கர்
மிகப்பெரிய நகரம் ராய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
ஆளுநர் சேகர் தத்
முதலமைச்சர் ராமன் சிங்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (90)
மக்கள் தொகை 2,55,40,196 (17வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.516 (medium
கல்வியறிவு 70.28% (23வது)
மொழிகள் இந்தி, சத்தீஸ்கரி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் chhattisgarh.nic.in

சத்தீஸ்கர் (Chhattisgarh) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,545,198 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,832,895 மற்றும் பெண்கள் 12,712,303 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 991 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,661,689 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.27% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.24% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.11% ஆக உள்ளது. [1]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 23,819,789 (93.25%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 514,998 (2.02 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 490,542 (1.92 %) ஆகவும், பௌத்த சமயத்தவர்களின் மக்கள் தொகை 70,467 (0.28 %) ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள் தொகை 61,510 (0.24 %), சீக்கிய சமய மக்கள்தொகை 70,036 (0.27 %) ஆகவும் 61,510 0.24 % சமயம் குறிப்பிடாதவர்கள் 23,262 (0.09 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 494,594 (1.94 %) ஆக உள்ளனர்.

புவியியல்[தொகு]

பொருளாதாரம்[தொகு]

சத்தீஸ்கர் மாநிலத்தின் 2010-ஆம் வருடத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 60,079 கோடி ரூபாய் ஆகும். 2009 - 2010 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 11.49% உயர்ந்தற்கு [2] வேளாண்மைத் தொழிலும், தொழில் வளர்ச்சியுமே முக்கிய காரணிகள் ஆகும்.

வேளாண்மை[தொகு]

வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4.828 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. [3] [4] மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாணமைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர்.

நெல், நவதாணியங்கள், எண்ணைய் வித்துக்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்கள் ஆகும்.

மாநிலத்தின் மொத்த பரப்பில் 41.33% பகுதிகள் வளமிக்க காட்டுப் பகுதிகள் கொண்டது.

தொழில் துறை[தொகு]

இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் 20% சத்தீஸ்கர் மாநிலம் கொண்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தொடருந்து[தொகு]

ராய்ப்பூர் தொடருந்து நிலையம் மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இருப்புப்பாதையால் இணைக்கிறது. [5]

விமான நிலையம்[தொகு]

ராய்ப்பூர் விமான நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களை வானூர்தி மூலம் இணைக்கிறது. [6] [7]

நெடுஞ்சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலைகள் சத்தீஸ்கர் மாநிலத்த்தின் பகுதிகளையும் மற்றும் மாநிலங்களையும் தரை வழியாக இணைக்கிறது.[8]

சுற்றுலா[தொகு]

நிர்வாகம்[தொகு]

சத்தீஸ்கர் மாநிலம் நிர்வாக வசதிக்காக 5 கோட்டங்களாகவும், 27 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பஸ்தர் கோட்டம் துர்க் கோட்டம் ராய்ப்பூர் கோட்டம் பிலாஸ்பூர் கோட்டம் சுர்குஜா கோட்டம்
 1. பஸ்தர்
 2. பிஜப்பூர்
 3. சுக்மா
 4. தந்தேவாடா
 5. கொண்டகவான்
 6. நாராயண்பூர்
 7. காங்கேர்
 1. கவர்தா
 2. ராஜ்நாந்துகாவ்
 3. பலோட்
 4. துர்க்
 5. பெமேதரா
 1. தம்தரி
 2. கரியாபந்து
 3. ராய்ப்பூர்
 4. பலோட்
 5. மகாசமுந்து
 1. பிலாஸ்பூர்
 2. முங்கேலி
 3. கோர்பா
 4. ஜாஞ்சுகீர்
 5. ராய்கர்
 1. கோரியா
 2. சூரஜ்பூர்
 3. சர்குஜா
 4. பலராம்பூர்
 5. ஜஷ்பூர்

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.census2011.co.in/census/state/chhattisgarh.html
 2. "Chhattisgarh's GDP growth highest in 2009–10". http://www.business-standard.com/india/news/chhattisgarh%5Cs-gdp-growth-highest-in-2009-10/406295/. பார்த்த நாள்: 22 July 2011. 
 3. "Agriculture in Chhattisgarh". மூல முகவரியிலிருந்து 21 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 July 2011.
 4. "Economy of Chhatisgarh". பார்த்த நாள் 22 July 2011.
 5. http://indiarailinfo.com/departures/raipur-junction-r/185
 6. https://www.makemytrip.com/flights/raipur-flight-tickets.html
 7. http://timesofindia.indiatimes.com/City/Raipur/Raipur-airport-to-go-international-soon/articleshow/38504003.cms
 8. National Highways in Chhattisgarh, Road Map
 9. "Chhattisgarh". Office of the Registrar General and Census Commissioner (18 March 2007). பார்த்த நாள் 23 July 2008.

வெளி இணைப்பு[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்&oldid=2047441" இருந்து மீள்விக்கப்பட்டது