ஜாஞ்சுகீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாஞ்சுகீர்
நகரம்
ஜாஞ்சுகீர் is located in Chhattisgarh
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஞ்சுகீர் நகரத்தின் அமைவிடம்
ஜாஞ்சுகீர் is located in இந்தியா
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′01″N 82°34′01″E / 22.017°N 82.567°E / 22.017; 82.567ஆள்கூறுகள்: 22°01′01″N 82°34′01″E / 22.017°N 82.567°E / 22.017; 82.567
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,561
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, சத்தீஸ்காரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்495668
தொலைபேசி குறியீடு07817
வாகனப் பதிவுCG-11
அருகமைந்த நகரங்கள்பிலாஸ்பூர், சம்பா, கோர்பா
எழுத்தறிவு73%
இணையதளம்janjgir-champa.nic.in
Temple of vishnu.
விஷ்ணு கோயில், ஜாஞ்சுகீர்
A big pond.
பீமா குளம்

ஜாஞ்சுகீர் (Janjgir) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 1998-இல் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொன்டு ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டம் உருவானது. ஜாஞ்சுகீர் தொடருந்து நிலையம் மாநிலத் தலைந்கர் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 200 பிலாஸ்பூர் மற்றும் ராய்ப்பூர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 8,690 வீடுகளும் கொண்ட நய்லா ஜாஞ்சுகீர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 40,561 ஆகும். அதில் ஆண்கள் 20,731 மற்றும் பெண்கள் 19,830 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5288 (13.04%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 957 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.59%, முஸ்லீம்கள் 3.52%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]

இரயில் போக்குவரத்து[தொகு]

ஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், ஜாஞ்சுகீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை பிரிவில் உள்ள ஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், மும்பை, கொல்கத்தா, புனே, நாக்பூர், புரி, விசாகப்பட்டினம், டாடாநகர், ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் இணைக்கிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஞ்சுகீர்&oldid=2972879" இருந்து மீள்விக்கப்பட்டது