மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°13′N 82°12′E / 23.22°N 82.20°E / 23.22; 82.20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
மாவட்டம்
ஹஸ்தேவ் ஆற்றின் அமிர்தாரை அருவி
ஹஸ்தேவ் ஆற்றின் அமிர்தாரை அருவி
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
Map
மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
ஆள்கூறுகள் (மனேந்திரகர்-சிர்மிரி): 23°13′N 82°12′E / 23.22°N 82.20°E / 23.22; 82.20
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்சர்குஜா
நிறுவப்பட்ட நாள்9 செப்டம்பர் 2022
தலைமையிடம்மனேந்திரகர்
வருவாய் வட்டங்கள்6
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்3
பரப்பளவு
 • Total1,726.39 km2 (666.56 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total411,490

ஆண்கள் 53%: பெண்கள் 47%

பட்டியல் சமூகத்தினர் 8.35%, பட்டியல் பழங்குடியினர் 50.34%
Demographics
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுCG-32
முக்கியச் சாலைகள்3

மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் (Manendragarh-Chirmiri-Bharatpur district), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம மனேந்திரகர் நகரம் ஆகும்.[2]

அமைவிடம்[தொகு]

இம்மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடமேற்கில் சர்குஜா கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் மத்தியப் பிரதேசம், கிழக்கில் கோரியா மாவட்டம் மற்றும் சூரஜ்பூர் மாவட்டம், தெற்கில் கோர்பா மாவட்டம் மற்றும் கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் எல்லைகளாக உள்ளது. இம்மாவட்டம் மலைக்காடுகளால் சூழ்ந்தது. இம்மாவட்ட மக்கள் பெரும்பாலும் பழங்குடியினர் ஆவார்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் பாரத்பூர், மனேந்திரகர், கட்கான்வான், சிர்மிரி, கேல்காரி மற்றும் கோட்டடோல் என 6 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 411,490 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8.35% மற்றும் 50.34% ஆகவுள்ளனர். 32.27% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[3]

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.20%, பழங்குடி சமயத்தினர் 2.61%, இசுலாமியர் 3.92% , கிறித்தவர்கள் 1.32% மற்றும் பிறர் 0. 95% ஆகவுள்ளனர்.[4] இதன் மக்கள் தொகையில் இந்தி மொழி பேசுவோர் 38.58% சர்குஜா வட்டார மொழி பேசுவோர் 34.09%, பக்கேலி மொழி பேசுவோர் 7.08%, ஒடியா மொழி பேசுவோர் 1.77%, போஜ்புரி மொழி பேசுவோர் 1..33%, வங்காள மொழி பேசுவோர் 1.19%, சத்திரி மொழி பேசுவோர் 1.06% ஆகவும் மற்றும் பிற மொழிகள் பேசுவோர் 4.26% ஆக உள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chief Minister inaugurated the newly-formed Manendragarh-Chirmiri-Bharatpur district
  2. "The means of formation of latest district Manendragarh-Chirmiri-Bharatpur began". reportwire.in.
  3. "District Census Handbook: Koriya" (PDF). censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
  4. "Table C-01 Population by Religion: Chhattisgarh". censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
  5. "Table C-16 Population by Mother Tongue: Chhattisgarh". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.