விஷ்ணு தேவ் சாய்
விஷ்ணு தேவ் சாய் | |
---|---|
2023ல் விஷ்ணு தேவ் சாய் | |
சத்தீஸ்கர் மாநிலத்தின் 4வது முதலமைச்சர் | |
Designate | |
பதவியில் 13 டிசம்பர் 2023 | |
ஆளுநர் | விஸ்வபூசண் ஹரிசந்திரன் |
Deputy | அருண் சௌ விஜய் சர்மா |
Succeeding | பூபேஷ் பாகல் |
சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2023 | |
தொகுதி | குன்குரி சட்டமன்றத் தொகுதி |
மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 2 சூன் 2020 – 9 ஆகஸ்டு 2022 | |
இணை அமைச்சர் இந்திய அரசு | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
அமைச்சகம் | பதவிக் காலம் |
உருக்கு அமைச்சகம் | 26 மே 2014 - 30 மே 2019 |
சுரங்கங்கள் அமைச்சகம் | 26 மே 2014 - 5 சூலை 2016 |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் | 26 மே 2014 - 9 நவம்பர் 2014 |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1999–2019 | |
முன்னையவர் | அஜித் ஜோகி |
பின்னவர் | கோம்தி சாய் |
தொகுதி | ராய்கர் மக்களவைத் தொகுதி |
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1990–1998 | |
முன்னையவர் | நந்த குமார் சாய் |
பின்னவர் | நந்த குமார் சாய் |
தொகுதி | தப்கரா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 பெப்ரவரி 1964 ஜஸ்பூர், மத்தியப் பிரதேசம் (தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கௌசல்யா சாய் |
பிள்ளைகள் | 1 மகன் 2 மகள்கள் |
வாழிடம்(s) | பகியா, சத்தீஸ்கர் |
விஷ்ணு தேவ் சாய் (Vishnu Deo Sai பிறப்பு: 21 பிப்ரவரி 1964), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலததின் 4வது மாநிலத்தின முதலமைச்சராக 13 டிசம்பர் 2023ல் பதவியேற்றார். முன்னர் இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும், 1999 முதல் 2019 முடிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் உருக்கு அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களின் இணை அமைச்சராக 26 மே 2014 முதல் 30 மே 2019 முடிய பதவி வகித்துள்ளார். மேலும் இவர் 1990-1998 வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்.
பின்னணி
[தொகு]2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. எனவே விஷ்ணு தேவ் சாய் 10 டிசம்பர் 2023 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]