அஜித் ஜோகி
அஜித் ஜோகி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000-2003 | |
முன்னவர் | ராம் தயாள் உய்கே |
பின்வந்தவர் | அமித் ஜோகி |
தொகுதி | மார்வாகி (பழங்குடி) தொகுதி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
தொகுதி | மகாசமுந்து மக்களவைத் தொகுதி |
சத்தீஸ்கர் முதலமைச்சர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 29 ஏப்ரல் 1946[1] பிலாஸ்பூர், சத்தீஸ்கர் |
இறப்பு | 29 மே 2020 |
அரசியல் கட்சி | சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரேணு ஜோகி |
பிள்ளைகள் | அமித் ஜோகி |
இருப்பிடம் | ராய்ப்பூர் |
அஜித் பிரமோத் குமார் ஜோகி (Ajit Pramod Kumar Jogi) (பிறப்பு: 29 ஏப்ரல் 1946)[2] இந்தியாவின் பிலாஸ்பூரில் பிறந்தவர். 2000-ஆம் ஆண்டில் உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவது முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தவர்.[3] இவர் 9 மே 2020 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.
கல்வி & அரசுப் பணி[தொகு]
போபால் மௌலானா ஆசாத் தொழில் நுட்ப கல்லூரியில் படித்து பின்னர் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்.[4] இந்தூர் மாவட்ட ஆட்சியராக 1981 முதல் 1985 முடிய பணிபுரிந்தவர்.
வகித்த அரசியல் பதவிகள்[தொகு]
- 1986-87-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பட்டியல் மக்கள் நலக் குழுவில் உறுப்பினர் பதவி.
- 1986-1998 மாநிலங்களவை உறுப்பினர். (இரண்டு முறை)[4]
- 1987-1989 பொதுச்செயலர், மத்தியப் பிரதேச மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சி.
- 1998 - 12-வது மக்களவை உறுப்பினர், ராய்கர் மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம்[5]
- 2000-2003 சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர்[4]
- 2004-2008 மக்களவை உறுப்பினர், மகாசமுந்து மக்களவைத் தொகுதி[6]
- 2008- சத்தீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர், மார்வாகி சட்டமன்றத் தொகுதி
புதிய கட்சி[தொகு]
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஜித் ஜோகி, சூன் 2016-இல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.[7][8][9]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.answers.com/topic/ajit-jogi
- ↑ "Ajit Jogi (born 29 April 1946)". 16 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ AJIT JOGI BIOGRAPHY
- ↑ 4.0 4.1 4.2 "Profile/Chhattisgarh Chief Minister Ajit Jogi". Rediff.com. 1 November 2000. 23 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Jogi's true colours". Rediff.com. 31 December 2004. 23 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ajit Jogi, Ujwala Shinde in Congress list". The Hindu. 31 March 2004. Archived from the original on 15 நவம்பர் 2004. https://web.archive.org/web/20041115002112/http://www.hindu.com/2004/03/31/stories/2004033104061100.htm. பார்த்த நாள்: 23 January 2010.
- ↑ http://navbharattimes.indiatimes.com/state/madhya-pradesh/bhopal/indore/ajit-jogi-announces-new-party-part-ways-from-congress/articleshow/52622422.cms
- ↑ Ajit Jogi announces new political party
- ↑ Congress set to split in Chhattisgarh