தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (இந்தியா)
Appearance
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) இந்திய அரசின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகமானது தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் கடைநிலையில் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பாகும். [1]
9 நவம்பர் 2014 அன்று தொழில்துறை பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் பொறுப்புகள் போன்ற திறன் மேம்பாட்டுப் பொறுப்புகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. [2]
இதன் தற்போதைய மூத்த அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் இணை அமைச்சர் இராமேஷ்வர் தெலி ஆவார்.
பணிகள்
[தொகு]செயல்பாடுகள்
[தொகு]அமைச்சகத்தின் மிக முக்கியமான பணிகள்: [3]
- தொழிலாளர் கொள்கை மற்றும் சட்டம்
- பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உழைப்பின் நலன்
- சமூக பாதுகாப்பு
- தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில்துறையில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துதல்
- தொழில்துறை சார்ந்த பிரச்சனைகளை தொழில்துறை தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் வழியாக தீர்வுகாண்பது
- தொழிலாளர் மேம்பாட்டுக் கல்வி
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்
தன்னாட்சி நிறுவனங்கள்
[தொகு]- ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
- தொழில்சார் சேவைகளுக்கான தேசிய நிறுவனம் (முந்தைய CIRTES)
- வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம்
- தொழிலாளர் கல்விக்கான மத்திய வாரியம்
இந்திய தொழிலாளர் அமைச்சர்கள்
[தொகு]எண் | பெயர் | பொறுப்பு வகித்த வருடம் | கட்சி | பிரதமர்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | ஜெகசீவன்ராம் | 15 ஆகத்து 1947 | 13 மே 1952 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | |
2 | வி. வி. கிரி | 13 மே 1952 | 07 செப்டம்பர் 1954 | |||
3 | கண்டஞ்சி தேசாய் | 10 செப்டம்பர் 1954 | 16 ஏப்ரல் 1957 | |||
4 | குல்சாரிலால் நந்தா | 17 ஏப்ரல் 1957 | 10 ஏப்ரல் 1962 | |||
5 | ஜெய்சுக் லால் கைத்தி (தொழிலாளர் அமைச்சர்) |
16 ஏப்ரல் 1962 | 15 நவம்பர் 1962 | |||
6 | குல்சாரிலால் நந்தா | 01 செப்டம்பர் 1963 | 24 சனவரி 1964 | |||
7 | தாமோதரம் சஞ்சீவய்யா | 24 சனவரி 1964 | 24 சனவரி 1966 | ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி | ||
8 | ஜெகசீவன்ராம் | 24 சனவரி 1966 | 13 March 1967 | இந்திரா காந்தி | ||
9 | ஜெய்சுக் லால் கைத்தி | 13 மார்ச் 1967 | 15 நவம்பர் 1969 | |||
10 | ஜெகசீவன்ராம் | 15 நவம்பர் 1969 | 18 பெப்ரவரி 1970 | |||
11 | தாமோதரம் சஞ்சீவய்யா | 18 பெப்ரவரி 1970 | 18 மார்ச் 1971 | |||
12 | ரவீந்திர வர்மா | 26 மார்ச் 1977 | 28 சூலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | |
13 | ஃபஸ்லூர் ரஹ்மான் | 28 சூலை 1979 | 14 சனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | |
14 | ஜனகி பல்லப் பட்நாயக் | 14 சனவரி 1980 | 07 சூன் 1980 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | |
15 | நா. த. திவாரி | 19 அக்டோபர் 1980 | 08 ஆகத்து 1981 | |||
16 | பகவத் ஜா ஆசாத் (தனி அதிகாரம்) |
15 சனவரி 1982 | 02 நவம்பர் 1982 | |||
17 | வீரேந்திர பட்டீல் | 02 நவம்பர் 1982 | 31 திசம்பர் 1984 | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி | ||
18 | டங்குத்துரி அஞ்சா (தனி அதிகாரம்) |
31 திசம்பர் 1984 | 20 சனவரி 1986 | ராஜீவ் காந்தி | ||
19 | பி. ஏ. சங்மா (தனி அதிகாரம்) |
20 செப்டம்பர் 1986 | 06 பெப்ரவரி 1988 | |||
20 | மஹான் லால் போட்டர் | 06 பெப்ரவரி 1988 | 14 பெப்ரவரி 1988 | |||
21 | ஜக்திஷ் டைட்லெர் (தனி அதிகாரம்) |
14 பெப்ரவரி 1988 | 26 சூன் 1988 | |||
22 | பிந்டேஸ்வரி துபாய் | 26 சூன் 1988 | 02 திசம்பர் 1989 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ministry of Labour and Employment Annual Report for Year 2011–2012" (PDF). Ministry of Labour and Employment. பார்க்கப்பட்ட நாள் 6 June 2012.
- ↑ "National Skill Development Mission". www.pmindia.gov.in.
- ↑ "Thrust Areas of Ministry of Labour & Employment, Govt. of India".
வெளி இணைப்புகள்
[தொகு]- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- தேசிய தொழில் சேவை போர்டல்
- அதிகாரப்பூர்வ அமைச்சக செய்தி வெளியீடுகள்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் அமைப்பு விளக்கப்படம்
- 2011–2012 ஆண்டிற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐ.நா.
- இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவில் பெண் தொழிலாளர்கள்
- தொழிலாளர் அமைச்சகத்துடன் தொடர்புடைய வலைத்தளங்கள்
- அதிகாரப்பூர்வ தொழிலாளர் புள்ளிவிவரம்