ரமன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமன் சிங்
சத்தீசுக்கர் முதலமைச்சர்
பதவியில்
திசம்பர் 8 2008 - திசம்பர் 17 2018
தொகுதி ராஜ்நந்த்காவ்ன்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 அக்டோபர் 1952 (1952-10-15) (அகவை 71)
கவர்தா, சத்தீசுக்கர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வீணா சிங்
பிள்ளைகள் அபிசேக் சிங், அசுமிதா சிங்
இருப்பிடம் சிவில் லைன்சு, ராய்ப்பூர் 492001
இணையம் http://www.ramansingh.in

ரமன் சிங் (रमन सिंह, Raman Singh)(பிறப்பு 15 அக்டோபர் 1952) இந்தியாவின் புதிய மாநிலமான சத்தீசுக்கரின் முன்னாள் முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.திசம்பர் 7,2003 முதல் 17 டிசம்பர்,2018 வரை முதலமைச்சராக இருந்தார்.

அரசியல் வாழ்வு[தொகு]

மருத்துவர் ரமன் சிங் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார்.தமது இளமையிலேயே பாரதிய ஜன சங்கத்தில் இணைந்து நகராட்சி மன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் என முன்னேறியவர்.சத்தீசுக்கரின் ராஜ்நந்த்காவிலிருந்து 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்றதிலிருந்து அவரது அரசியல் வாழ்வில் ஓர் திருப்பம் ஏற்பட்டது.அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.பின்னர் மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டு 2003 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி தேடித் தந்தார்.முதலமைச்சராக எதிர்பார்க்கப்பட்ட திலீப் சிங் ஜூதேவ் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டதால் பாஜக தலைமை இவரை முதலமைச்சராக பரிந்துரைத்தது.

மிகவும் தூய்மையான நிர்வாகத்தைச் செயல்படுத்தியதன் பின்னணியில் 2008 ஆம் ஆண்டு தேர்தல்களில் மீண்டும் வாகை சூடினார்.இரண்டாம் முறையாக திசம்பர் 12,2008 அன்று சத்தீசுக்கர் முதல்வராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[1].

இதனையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமன்_சிங்&oldid=3578875" இருந்து மீள்விக்கப்பட்டது