பூபேஷ் பாகல்
பூபேஷ் பாகல் | |
---|---|
3 ஆவது சத்தீசுகர் முதலமைச்சர் | |
பதவியில் டிசம்பர் 182018 – டிசம்பர் 132023 | |
ஆளுநர் | ஆனந்திபென் படேல் |
முன்னையவர் | ராமன் சிங் |
பதான் சட்டமனறத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர், 2014 | |
முன்னையவர் | விஜய் பாகல் |
தொகுதி | பதான் சட்டமனறத் தொகுதி |
பதவியில் 1993–2008 | |
பின்னவர் | விஜய் பகல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 ஆகத்து 1961 துர்க் மாவட்டம், சத்தீசுகர், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | முதேஷ்வர் பகல் |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | மன்சோரவர் அவாசிய பரிசர், பிலாய், சத்தீசுகர் |
வேலை | அரசியல்வாதி |
பூபேஷ் பாகல் (Bhupesh Baghel (பிறப்பு: ஆகஸ்டு 23, 1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினை விட இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பானமையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. சத்தீசுகர் மாநில காங்கிரசு குழுவின் தலைவராக அக்டோபர், 2014 முதல் இருந்து வருகிறார்.[2][3] இவர் துர்க் மாவட்டம் பதான் சட்டசபைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[4][5]
பின்னணி
[தொகு]பூபேஷ் பகல் ஆகத்து 23, 1961 இல் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குர்மி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்[6][7]. இவரின் தந்தை நந்தகுமார் தாய் பிந்தேஷ்வர் பகல் ஆவர். இவர் முக்தேஷ்வரி பகல் என்பவரைத் திருமணம் செய்தார். இவருக்கு மரு. நரேந்திர தேவ் வர்மா எனும் மகள் உள்லார். இவர் இந்தி எழுத்தாளர் ஆவார்.[8]
அரசியல் வாழ்க்கை
[தொகு]பூபேஷ் பகல் 1980 ஆம் ஆண்டில் தனது அரசியல் குரு சண்டலால் சந்திரக்கரின் வழிகாட்டுதலின் கீழ் தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். 1985 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர் காங்கிரசின் உறுப்பினராகச் சேர்ந்தார்[9]. 1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரை துர்க் மாவட்ட தலைவராக இருந்தார்.[10] பின் 1994 முதல் 1995 வரை மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரசின் உதவித் தலைவராக இருந்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.hindustantimes.com/india-news/congress-names-bhupesh-baghel-as-new-chief-minister-of-chhattisgarh/story-pWsp3qkM9lTQJOgIMSEJHN.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
- ↑ "Fixing of the Antagarh byelection was a pilot project of the BJP: Bhupesh Baghel". 24 January 2016.
- ↑ ADR. "Bhupesh Baghel(Indian National Congress(INC)):Constituency- PATAN(DURG) - Affidavit Information of Candidate:". myneta.info.
- ↑ "Official Website of Chhattisgarh Legislative Assembly". www.cgvidhansabha.gov.in.
- ↑ "Chhattisgarh CM-Designate Bhupesh Baghel Seeks People's Support to Eliminate Naxalism', Congress Reiterates Farm Loan Waiver Promise". News18. பார்க்கப்பட்ட நாள் 2018-12-16.
- ↑ "Congress warrior Bhupesh Baghel to be chief minister of Chhattisgarh - Times of India ►". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-16.
- ↑ "नरेन्द्र देव वर्मा - कविता कोश". kavitakosh.org.
- ↑ "Home". iyc.in.
- ↑ "Indian Youth Congress Durg." www.facebook.com.