கோர்பா, சத்தீஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோர்பா
—  நகரம்  —
கோர்பா
இருப்பிடம்: கோர்பா
, சத்தீஸ்கர் , இந்தியா
அமைவிடம் 22°21′N 82°41′E / 22.35°N 82.68°E / 22.35; 82.68ஆள்கூறுகள்: 22°21′N 82°41′E / 22.35°N 82.68°E / 22.35; 82.68
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீஸ்கர்
மாவட்டம் கோர்பா
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி கோர்பா
மக்கள் தொகை 3,15,695 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


252 மீட்டர்கள் (827 ft)

கோர்பா (Korba, இந்தி: कोरबा) இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஓர் தொழிற்சாலைகள் மிகுந்த நகரமாகும். நவம்பர் 1, 2000 அன்று உருவான சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா மாவட்டத்தின் மத்தியில் கோர்பா நகரம் அமைந்துள்ளது. (மக்கள்தொகை 501568). சத்தீஸ்கரின் ஆற்றல் தலைநகரமாக கோர்பா விளங்குகிறது. பிலாஸ்பூர் கோட்டத்தில் உள்ள வனங்கள் மிகுந்த இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் பழங்குடி மக்கள் (பகாடி குறவர்கள்) வசிக்கின்றனர். இந்தப் பழங்குடி மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்வதுடன் தங்கள் தனித்துவமான பண்பாட்டு மரபு வழக்கங்களையும் தொடர்ந்து வருகின்றனர்.

கோர்பா மாவட்டத்தில் நிலக்கரியும் தண்ணீரும் மிகையாகக் கிடைப்பதால் இங்கு நான்கு அனல்மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன; இவை மொத்தமாக 3650 மெகாவாட் மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இவை தவிர, பாங்கோ எனுமிடத்தில் நீர்மின்திறன் நிலையமும் நிறுவப்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்கள் இங்குள்ளன. அலுமினியம் தயாரிக்கும் பாரத் அலுமினியம் நிறுவனம் (பால்கோ)வும் இங்குள்ளது.

கோர்பா நகரம் அசுதேவ் மற்றும் அகிரன் ஆறுகள் இணையுமிடத்தில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

கோர்பாவின் அமைவிடம் 22°21′N 82°41′E / 22.35°N 82.68°E / 22.35; 82.68 ஆகும்.[1] இதன் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 252 மீட்டர்கள்(826 அடிகள்) ஆகும்.

விவரங்கள் புள்ளிவிவரம்
மொத்த மக்கள்தொகை 1011823
பாலின விகிதம் 964
ஆண்கள் 515147
மகளிர் 496676
படிப்பறிவு 61.7

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்பா,_சத்தீஸ்கர்&oldid=3366690" இருந்து மீள்விக்கப்பட்டது