சுக்மா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுக்மா

தட்சிண் பசுதார் சுக்மா

—  மாவட்டம்  —
சுக்மா
இருப்பிடம்: சுக்மா
, சத்தீசுகர்
அமைவிடம் 18°24′0″N 81°40′0″E / 18.40000°N 81.66667°E / 18.40000; 81.66667ஆள்கூற்று : 18°24′0″N 81°40′0″E / 18.40000°N 81.66667°E / 18.40000; 81.66667
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீசுகர்
மாவட்டம் சுக்மா மாவட்டம்
அருகாமை நகரம் ஜகதால்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பஸ்தார்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீசுகர்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீசுகர்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீசுகர்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 2.49
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்
கடற்கரை


197 மீற்றர்கள் (646 ft)
0 கிலோமீற்றர்கள் (0 mi)


சுக்மா மாவட்டம் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் தென்பகுதியில் தெற்கு பஸ்தார் வலயத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஓர் மாவட்டமாகும்.

புவியியல்[தொகு]

இதன் அமைவிடம் 18°24′0″N 81°40′0″E / 18.40000°N 81.66667°E / 18.40000; 81.66667 ஆகும்; கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 197 மீ உயரத்தில் உள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

சுக்மா அண்மையிலுள்ள பெரிய நகரமான ஜகதால்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 221 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எல்லை மாவட்டங்களாக ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டமும் ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டமும் உள்ளன.

சிறப்புக் கூறுகள்[தொகு]

  • சபரி ஆறு
  • பெப்ரவரியில் ஜாத்ரா

மிகவும் பிற்பட்ட பகுதியாக இருப்பினும் கல்வி மற்றும் படிப்பறிவு வீதங்கள் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே மிகக் கூடுதலான காட்டுப்பகுதி நிறைந்த மாவட்டமாக (4000+ ச.கிமீ) விளங்குகிறது. இங்குள்ள சபரி ஆற்றில் கிடைக்கும் தூயநீர் இறால்கள் (ஜிங்கா) மிகவும் பிரபலமானவை. வனப்பொருட்களான தென்டுப்பட்டா, சிரோஞ்சி, புளி, மகுவா, அர்ரா மற்றும் பிசின் ஆகியவற்றிற்காகவும் புகழ் பெற்றது.

மாவட்டம்[தொகு]

ஆகத்து 15, 2011இல் சத்தீசுகர் முதலமைச்சர் ராமன் சிங்கால் 2012ஆம் ஆண்டில் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட 9 புதிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. சனவரி 16, 2012 அன்று முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்டது.

பொறுப்பிலுள்ள அதிகாரிகள்:

  • முதல் மாவட்ட நீதிபதி (ஆட்சியர்) - திரு. அலெக்சு வி. எஃப். பால் மேனன் IAS
  • முதல் காவல் கண்காணிப்பாளர் - திரு. அபிசேக் சாண்டில்யா, IPS
  • முதல் வனச்சரக அதிகாரி - திரு. நவீத் சவுஜூத்தின், IFS

நக்சலைட்களால் ஆட்சியர் சிறை பிடிப்பு[தொகு]

தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான நக்சலைட்|மாவோயிச பொதுவுடமைக் கட்சித் ]] தோழர்கள் ஏப்ரல் 21, 2012 அன்று ஓர் சிற்றூர் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சுக்மா மாவட்டத்தின் ஆட்சியர் அலெக்சு பால் மேனனை மாலை நேரத்தில் கடத்திச் சென்று பிணைக்கைதியாக சிறை வைத்தனர். அவருடன் உடனிருந்த இரு தனிப் பாதுகாப்புக் காவலர்களை சுட்டுக் கொன்றனர். [2] பாளையங்கோட்டையில் பயின்ற அலெக்சை விடுவிக்க இரண்டு பெண்கள் உட்பட 17 தோழர்களை சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும், தங்களுக்கு எதிரான "பசுமைத் தேடல் நடவடிக்கையை" நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பஸ்தரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்பன[3] அவர்களது கோரிக்கையாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.fallingrain.com/world/IN/37/Sukma.html Map and weather of Sukma
  2. "Maoists kill two security guards, kidnap Collector in Chhattisgarh". த இந்து (ஏப்ரல் 21, 2012). பார்த்த நாள் ஏப்ரல் 29, 2012.
  3. "Collector Menon kidnap: No breakthrough in talks". பிடிஐ செய்தி நிறுவனம். எக்சுபிரசு பஸ் (ஏப்ரல் 28, 2012). பார்த்த நாள் ஏப்ரல் 29, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்மா_மாவட்டம்&oldid=1368729" இருந்து மீள்விக்கப்பட்டது