சரங்கர்-பிலைகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரங்கர்-பிலைகர் மாவட்டம் (Sarangarh-Bilaigarh District) 15 ஆகஸ்டு 2021 அன்று சத்தீசுகர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தற்போது உள்ள 28 மாவட்டங்களுடன் சரங்கர்-பிலைகர் மாவட்டம், மோலா மன்பூர் மாவட்டம், சக்தி மாவட்டம் மற்றும் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் எனும் நான்கு புதிய மாவட்டங்களை அறிவித்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலம் 32 மாவட்டங்களைக் கொண்டிருக்கும். [1][2][3][4][5] ராய்கர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய சரங்கர்-பிலைகர் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2021 அன்று சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]